சான் அன்றியாஸ் பிளவு

சான் அன்றியாஸ் பிளவு - வான்புகைப்படம்

சான் அன்றியாஸ் பிளவு (San Andreas Fault) என்பது வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் அரீனா முனை தொடக்கம் இம்பீரியல் பள்ளத்தாக்கு வரை பரந்து காணப்படும் 1300 கிலோ மீட்டர் நீளமான வெடிப்பாகும். இவ் வெடிப்பு அதன் இருபுறமும் வட அமெரிக்க நிலத்தளத்தையும் பசிபிக் நிலத்தளத்தையும் பிரிக்கும் எல்லையாகவும் அமைந்துள்ளது.

இவ்வெடிப்பு 1895 இல் வட கலிபோர்னியாவில் கலிபோர்னியப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் அந்திரோ லோசனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டு நிகழ்ந்த சான் பிரான்சிஸ்கோ நிலநடுக்கத்தின் பின் இவ்வெடிப்பு தெற்குக் கலிபோர்னியா வரை நீண்டு செல்வது கண்டறியப்பட்டது. 1953 ஆம் ஆண்டு இது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நிலைக்குத்து வெடிப்பைக் கொண்ட ஒரு பிளவாக முன்மொழியப்பட்டது.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!