சான்-டெனி (Saint-Denis, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃.d(ə).ni]) என்பது பிரான்சின், பாரிசு நகரின் வடக்கேயுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது தலைநகர் பாரிசில் இருந்து 9.4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்நகரில் புனித டெனியின் பேராலய அரச இடுகாடு, பேராலயத்தின் மடாதிபதியின் இடம் போன்றவை உள்ளன. அத்துடன், இங்கு 1998 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைக்காகக் கட்டப்பட்ட பிரான்சின் தேசிய கால்பந்து, மற்றும் ரக்பி அரங்கும் உள்ளது.
சான்-டெனி முன்னாள் தொழிற்துறைப் புறநகராக இருந்து வந்தது. தற்போது இங்கு வாழிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்