கூடலூர் வருவாய் கோட்டம் (Gudalur division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதில் கூடலூர், பந்தலூர் ஆகிய இரு வட்டங்கள் அடங்கும். 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த வருவாய் கோட்டத்தின் மக்கள் தொகை 2,32,213 ஆகும்.
கூடலூர் வருவாய் கோட்டம் நீலகிரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளை உள்ளடக்கியது, கடல் மட்டத்திலிருந்து 934 முதல் 1124 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்