குறிச்சி சேஷகிரி கிருஷ்ணசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் ஆதிசேஷனுடன் கூடிய கிருஷ்ணர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் கோகுலஷ்டமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்