காவல்துறையின் தலைமை இயக்குநர்

இந்தியக் காவல் பணியில் தலைமை இயக்குநர் பதவியின் சின்னம்

இந்தியாவில் காவல்துறையின் தலைமை இயக்குநர் (ஆங்கில மொழி: Director General of Police) என்பது இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர். ஆயினும் இவர்கள் சிறைத்துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை முதலிய மாநில அரசின் துறைகளின் தலைவர்களாகவோ அல்லது நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய சேமக் காவல் படை போன்ற நடுவண் அரசின் துறைகளிளோ பணியமர்த்தப்படலாம். அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து இப்பதவியின் சின்னமாகும்.[1][2] கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP) இந்திய காவல்துறை சேவையில் (IPS) ஒரு தலைமை இயக்குநர் (DGP) க்கு இளையவராக கருதப்படுகிறார். ஏடிஜிபி மற்றும் டிஜிபி இருவரும் 3-ஸ்டார் போலீஸ் தரவரிசையில் இருந்தாலும், டிஜிபி ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் போலீஸ் படையின் தலைவராகவும், ஏடிஜிபி ஒரு துணை அதிகாரியாகவும் இருக்கிறார்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!