கமலா குமாரி (Kamla Kumari) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். பீகார் மாநிலத்தினைச் சேர்ந்த கமலா குமாரி, இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பீகாரின் பலாமூ மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1967, 1971, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்