கண்ணி (மாலைவகை)

கண்ணி என்பது கண்கள் போலப் பூக்களை வைத்துக் கட்டும் ஒரு மாலை வகை ஆகும்.

சங்க இலக்கியங்களில் கண்ணி என்னும் சொல் இந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ள இடங்கள் பல.[1]

இரண்டு பூக்களின் காம்புகளை எதிர் எதிராக இணைத்து ஒன்றாக்குவது ஒரு கண்ணி. இந்தக் கண்ணியை இணைந்துள்ளவாறே நாரால் தொடுப்பர். இவ்வாறு பல கண்ணிகள் ஒரே நாரில் நீளமாகத் தொடுத்துத் தலைமுடியில் சுற்றியோ, தலைமுடிப் பின்னலில் மாட்டியோ சூடிக்கொள்வர்.

அடிக்குறிப்பு

  1. பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் - திரு 44
    குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி/இணைத்த கோதை அணைத்த கூந்தல் - திரு 199,200
    கண் ஆர் கண்ணி கரிகால்வளவன் - பொரு 148
    நறும் பூ கண்ணி குறவர் சூட - பொரு 219
    செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி - சிறு 54
    கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் - சிறு 65
    குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி/செல் இசை நிலைஇய பண்பின் - சிறு 267,268
    படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - பெரும் 60
    பல் பூ மிடைந்த படலை கண்ணி/ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் - பெரும் 174,175
    புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி/ஈர் உடை இரும் தலை ஆர சூடி - பெரும் 218,219
    தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி - முல் 71
    நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி - முல் 78
    உவலை கண்ணி வன் சொல் இளைஞர் - மது 311
    சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் - மது 596
    நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ - நெடு 6
    படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - நெடு 31
    தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி/நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி - குறி 115,116
    மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - பட் 109
    தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை - மலை 399
    தளிரொடு மிடைந்த காமரு கண்ணி/திரங்கு மரல் நாரில் பொலிய சூடி - மலை 430,431
    பகன்றை கண்ணி பழையர் மகளிர் - மலை 459
    வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி/திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என - மலை 466,467
    கார் நறும் கடம்பின் கண்ணி சூடி - நற் 34/8
    கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல - நற் 44/7
    பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர - நற் 121/7
    பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே - நற் 122/11
    வில்லா பூவின் கண்ணி சூடி - நற் 146/1
    மலை செம்_காந்தள் கண்ணி தந்தும் - நற் 173/2
    கண்ணி கட்டிய கதிர அன்ன - நற் 200/1
    குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி - நற் 220/2
    நீர் அலை கலைஇய கண்ணி/சாரல் நாடனொடு ஆடிய நாளே - நற் 357/9,10
    துறு கண் கண்ணி கானவர் உழுத - நற் 386/2
    ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணி/கல்லா மழவர் வில் இடை விலங்கிய - நற் 387/3,4
    குல்லை கண்ணி வடுகர் முனையது - குறு 11/5
    பேர் அமர் கண்ணி இருந்த ஊரே - குறு 131/2
    பல் ஆன் கோவலர் கண்ணி/சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே - குறு 358/6,7
    கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு - குறு 363/1
    பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் - ஐங் 87/1
    பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே - ஐங் 412/4
    குருந்த கண்ணி கோவலர் - ஐங் 439/2
    பனி மலர் கண்ணி கூறியது எமக்கே - ஐங் 479/5
    பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் - ஐங் 496/3
    நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி/வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும் - பதி 20/5,6
    முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் - பதி 21/20
    குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதி 21/24
    சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணி/அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் - பதி 27/4,5
    காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர் - பதி 30/9
    செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே - பதி 38/8
    பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் - பதி 40/14
    நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப - பதி 51/32
    யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி/அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர் - பதி 52/27,28
    உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி/வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள் - பதி 54/2,3
    வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி/வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து - பதி 56/3,4
    கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் - பதி 58/8
    சினம் செல தணியுமோ வாழ்க நின் கண்ணி/பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய - பதி 59/13,14
    காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர் - பதி 81/22
    தளிர் செரீஇ கண்ணி பறித்து - பரி 7/45
    இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி/திருந்து அடி தோய திறை கொடுப்பானை - பரி 9/36,37
    தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் - பரி 9/45
    கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை - பரி 11/103
    காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் - பரி 12/91
    அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் - பரி 20/81
    தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் - கலி 28/3
    அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் - கலி 32/4
    கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ - கலி 72/9
    இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா_கால் - கலி 73/9
    விடரி அம் கண்ணி பொதுவனை சாடி - கலி 101/22
    பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி/திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி - கலி 102/35,36
    கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் - கலி 103/4
    காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை - கலி 103/52
    மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி - கலி 105/64
    அவன் கண்ணி அன்றோ அது - கலி 107/13
    கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் - கலி 107/15
    கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா - கலி 107/31
    காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை - கலி 108/10
    கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் - கலி 109/10
    குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை - கலி 111/7
    அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் - கலி 115/17
    பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப - கலி 139/9
    அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி/நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய - கலி 140/7,8
    வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல் - அகம் 1/1
    களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி - அகம் 22/8
    முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி/பரியல் நாயொடு பன் மலை படரும் - அகம் 28/6,7
    பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி - அகம் 44/14
    ஆரம் கண்ணி அடு போர் சோழர் - அகம் 93/4
    அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி/பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி - அகம் 180/6,7
    வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி/தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர் - அகம் 191/3,4
    பல் இளம் கோசர் கண்ணி அயரும் - அகம் 216/11
    கடி உடை வியல் நகர் காவல் கண்ணி/முருகு என வேலன் தரூஉம் - அகம் 232/13,14
    செம் பூ கரந்தை புனைந்த கண்ணி/வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் - அகம் 269/11,12
    குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி/அசையா நாற்றம் அசை வளி பகர - அகம் 272/8,9
    குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி/ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ - அகம் 301/11,12
    இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி/வேலி சுற்றிய வால் வீ முல்லை - அகம் 314/18,19
    கண்ணி வாடிய மண்ணா மருங்குல் - அகம் 343/6
    வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் - அகம் 370/10
    கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி - அகம் 382/3
    கண்ணி கார் நறும் கொன்றை காமர் - புறம் 1/1
    வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் - புறம் 6/21
    மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் - புறம் 24/8
    கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ - புறம் 39/12
    பாசிலை தொடுத்த உவலை கண்ணி/மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் - புறம் 54/10,11
    செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி/ஒலியல் மாலையொடு பொலிய சூடி - புறம் 76/6,7
    யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு - புறம் 77/6
    செறிய தொடுத்த கண்ணி/கவி கை மள்ளன் கைப்பட்டோரே - புறம் 81/4,5
    வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் - புறம் 131/2
    கோடல் கண்ணி குறவர் பெருமகன் - புறம் 157/7
    கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும் - புறம் 158/9
    நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி/வடி நவில் அம்பின் வில்லோர் பெரும - புறம் 168/15,16
    சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன் - புறம் 174/18
    விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த - புறம் 198/11
    ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் - புறம் 201/15
    ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் - புறம் 202/10
    வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி/இனையோன் கொண்டனை ஆயின் - புறம் 227/9,10
    பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி - புறம் 249/8
    வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப - புறம் 253/2
    உவலை கண்ணி துடியன் வந்து என - புறம் 269/6
    பீலி கண்ணி பெருந்தகை மறவன் - புறம் 274/2
    மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் - புறம் 342/2
    காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி/கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே - புறம் 344/8,9
    ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி/கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை - புறம் 345/9,10
    ஈகை கண்ணி இலங்க தைஇ - புறம் 353/3
    கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி - புறம் 355/5
    தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை - புறம் 378/3
    பூக்களைக் கண்ணியாகவும், மாலையாகவும், செண்டாகவும் கட்டி அணிந்துகொள்வர்.

    கண்ணி தலையில் அணிந்துகொள்ளப்படும்.

    மாலை கழுத்தில் அணிந்துகொள்ளப்படும்.

    செண்டு கைக்கு அணியாகப் பிடித்துக்கொள்ளப்படும்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!