கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்

கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்
பிறப்பு(1929-10-22)22 அக்டோபர் 1929
கடம்ப்பூர், தமிழ்நாடு
இறப்பு26 திசம்பர் 2020(2020-12-26) (அகவை 91)
தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (பிறப்பு 22 அக்டோபர் 1929; இறப்பு 26 திசம்பர் 2020) இந்திய ஒன்றியத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அனைத்திந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

வாழ்க்கை

1929 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் வேளாண்மை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தவர் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் அவசரகாலத்தில் மிசா இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் நோயின் காரணமாக தீவிர அரசியலிருந்து விலகி ஓய்வில் இருந்த இவர், முதுமை காரணமாகவும், பக்கவாத நோயால் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் 26 திசம்பர் 2020 அன்று மரணமடைந்தார்.

அரசியலில்

இவர் 1984 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 9, 10, 12 வது மக்களவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 முதல் 1999 வரை இரண்டாவது வாஜ்பாய் அமைப்பில் அமைச்சராக பதவியில் இருந்தார். இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் (வருவாய், வங்கி மற்றும் காப்புறுதி) மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார்.

ஜனாநாதன் ஒரு சிறு கதை எழுத்தாளர் ஆவார். ஓடும் ரெயில் ஒருவன் என்ற இவரது சிறுகதை ஆனந்த விகடன் சிறுகதை போட்டியில் வென்றிபெற்றது.

ஆதாரங்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!