எரால்டு டெனிசு டைலர் (Harold Dennis Taylor) 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த வில்லை வடிவமைப்பாயர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். கூக்கின் மும்மை வில்லை இவரது முக்கிய கண்டுபிடிப்பாகும். 50 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெற்றவராவார்.[1]
1893 ஆம் ஆண்டில் கூக்கின் மும்மை வில்லை வடிவமைப்புக்காகக் காப்புரிமையும்[2], 1933 இல் டட்டல் பதக்கத்தையும் (Duddell Medal and Prize) பெற்றார்.[3]
அவர் சாருலோட் பெர்னான்டசு பார்ஃப் (Charlotte Fernandes Barff) என்பவரை மணந்தார். அவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருந்தனர்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்