எதிர் புரோத்தன் அல்லது எதிர்நேர்மின்னி (Antiproton) என்பது புரோத்தன் எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் புரோத்தன்களுடன் மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் பால் டிராக் என்ற அறிவியல் அறிஞர், தனது நோபல் பரிசுக்கான உரையில் எதிர் புரோத்தனின் மின்னுாட்டம் −1 எனவும், புரோத்தனின்மின்னுாட்டம் +1 எனவும் குறிப்பிட்டிருந்தார்.[2]
பாசிட்ரான் என்ற இலத்திரனின் எதிர்மத் துகள் இருப்பதைக் கண்டறிந்தார். பாசிட்ரான்கள் நேர் மின்னுாட்டமும், எதிர் தற்சுழற்சியும் (opposite spin) கொண்டிருந்தன.
1955 ஆம் ஆண்டு எமிலியோ செக்ரி (Emilio Segrè) & ஓவன் சாம்பர்லென் (Owen Chamberlain) ஆகிய அறிவியல் அறிஞர்கள், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பிவாட்ரான் என்ற துகள் முடுக்கி மூலம் எதிர்மத் துகள், எதிர் புரோத்தன் இருப்பது சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் 1959 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.
எதிர் புரோத்தனின் பண்புகளும், புரோத்தனின் பண்புகளும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. எதிர் புரோத்தனின் மின்னுாட்டம் மற்றும் காந்தத் திருப்புத்திறன் புரோத்தனிற்கு சம அளவிலும், எதிர் திசையிலும் இருப்பதும் அறியப்பட்டது.
துகளும், எதிர்மத் துகளும் பெரு வெடிப்புக் காலத்திலிருந்து ஒன்றையொன்று அழிக்காமல் இருப்பதற்கு காரணம் அண்டத்தில் எதிர்மத் துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு
காசுமிக் கதிர்கள் கண்டறியப்பட்ட காலத்திலேயே எதிர்மத் துகள்களும் கண்டறியப்பட்டன. காசுமிக் கதிர்களின் மோதல்களின் போது புரோத்தனும் எதிர் புரோத்தனும் உருவாவது கண்டறியப்பட்டது. A என்பத உட்கரு எனக் கொண்டால்:
p + A → p + p + p + A
(p) என்பது விண்மீன் திரள்களின் காந்தபுலத்துடன் தாெடர்புடையது.
காசுமிக் கதிர்கள் மோதல்களின் போது உருவாகும் நிறமாலையில் எதிர் புரோத்தன்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.[3]
↑Kennedy, Dallas C. (2000). "Cosmic Ray Antiprotons". Proc. SPIE. Gamma-Ray and Cosmic-Ray Detectors, Techniques, and Missions 2806: 113. doi:10.1117/12.253971.