எகிப்தின் காலநிலை (climate of Egypt) சூடான பாலைவன சூழலைக் கொண்டுள்ளது (கோப்பென் காலநிலை வகைப்பாடுBWh). குளிர்காலத்தில் மழைப்பொழிவைப் பெறும் வடக்கு நடுநிலக் கடலோரப் பகுதியை தவிர, பொதுவாக நாட்டின் அநேகப் பகுதிகள் மிகவும் வறண்டு காணப்படுகின்றது. பகல்நேர வெப்பநிலை வடக்கு கரையோரத்தில் மிகவும் மிதமானதாக இருப்பினும் கோடை மாதங்களில் தீவிர வெப்பமே எகிப்தின் பொதுவான காலநிலை அம்சமாகும்.
காற்று திசை
மத்தியதரைக் கடலில் இருந்து வடமேற்கு வளிமண்டலக் காற்றானது, எகிப்தின் வடக்கு கரையோரப் பகுதிகளில் மலைத் தொடரின் குறுக்கீடின்றி வீசுகிறது. இதனால் அப்பகுதியில் ஆண்டு முழுவதும் வெப்பநிலை மிதமாக இருக்கும். இதன் விளைவாக, சராசரி குறைந்த வெப்பநிலையானது குளிர்காலத்தில் 9.5 °C (49.1 °F) இலிருந்து கோடையில் 23 °C (73.4 °F) வரையும், சராசரி உயர் வெப்பநிலையானது குளிர்காலத்தில் 17 °C (62.6 °F) முதல் கோடையில் 32 °C (89.6 °F) வரை மாறுபடும். கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மிதமானதாக இருந்தாலும், வடதிசை காற்றுகளிலிருந்து தொலைவில் உள்ள உள்நாட்டுப் பகுதிகளின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில், பகல்நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும். எகிப்தின் பாலைவன பகுதிகளில் அமைந்துள்ள அசுவான், அல்-உக்சுர், அசியுட் அல்லது சோகாக் ஆகிய இடங்களின் வெப்பநிலை போன்று, கோடைகாலங்களில் சராசரியாக உயர் வெப்பநிலையானது 40 °C (104 °F) என்ற அளவில் இருக்கும்.
மணல் புயல்கள்
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் முதல் மே வரை, தெற்கில் அல்லது தென்மேற்கில் இருந்து மிகவும் சூடான, உலர் மற்றும் தூசி காற்று வீசும். இந்த காற்று கமசின் என்று அழைக்கப்படுகிறது. வறண்ட காற்று ஓட்டம் தொடர்ந்து பரந்து பாலைவன பகுதிகளில் மீது வீசும் போது, அதனுடன் மணல் மற்றும் தூசி துகள்கள் சேர்ந்து, இறுதியாக மணற்புயலாக உருமாறுகின்றது. எகிப்தின் மீது இந்த காற்று வீசும்போது, வெப்பநிலை அதிகபட்சமாக 45 °C (113 °F) க்கு உயர்ந்து, குறைந்த ஈரப்பதம் 5% க்கும் குறைகிறது. கமசின் காற்றினால் திடீரென ஆரம்ப வெப்ப அலைகளும் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவுகளும் எகிப்தில் ஏற்படுகிறது.
மழைப் பொழிவு
எகிப்தின் வடக்குக் கரையோரப் பகுதி சராசரியாக 20மி.மீ (0.79 அங்குலம்) - 200 மீமீ (7.87 அங்குலம்) மழைப்பொழிவைப் பெறுகிறது. எனினும் கெய்ரோவுக்கு தெற்கே, மத்திய மற்றும் தென்பகுதிகளின் சராசரி மழைப்பொழிவு 0 மில்லிமீட்டர்கள் (0.00 அங்குலங்கள்) ஆகக் குறைகிறது. அலெக்ஸாண்டிரியா, ரபா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளே எகிப்தின் மழைமிகு பகுதிகளாகும். எகிப்தின் சூரியஒளி நேரம் மிகவும் அதிகமானதாக உள்ளது. அலெக்ஸாண்டிரியா போன்ற வடக்குப் பகுதிகளில் 3300 மணியளவிலிருந்தும் தெற்கே உள்நாட்டுப் பகுதிகளில் 4000 மணியளவு வரையானதாகவும் உள்ளது.
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: Climate Charts[3]
Imperial conversion
J
F
M
A
M
J
J
A
S
O
N
D
0.1
57
35
0.1
58
36
0.2
65
42
0.2
75
50
0
82
57
0
88
61
0
90
64
0
90
64
0
87
61
0
78
54
0.1
68
45
0.2
60
39
வெப்பநிலை ( °F) மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
குறிப்பிடத்தக்க காலநிலை அம்சங்கள்
ரஃபா மற்றும் அலெக்ஸாண்டிரியா ஆகியவை மிகவும் வெப்பமான இடங்களாகும். அசிட் வறண்ட நகரமாகும். அஸ்வான் மற்றும் லக்சர் ஆகியவை வெப்பமான கோடை நாட்கள் கொண்ட நகரங்களாகும்.[4]
சிறந்த கோடை வாசதலங்கள்
மெர்சா மாத்ரு
போர்ட் சைட்
குறைந்த வெப்பநிலை ஏற்ற இறக்கம் கொண்ட இடங்கள்
போர்ட் சைட்
கொசெயர்
ராஸ் எல் பார்
பல்டிம் டமைட்ட அலெக்சாண்டிரியா
வெப்பமான இடங்கள்
ரஃபா
அலெக்சாண்டிரியா
அபு கிர்
ரொசெட்டா
பல்டிம்
காஃப்ர் எல் டவர்
மெர்சா மாத்ரு
வெப்பமான குளிர்கால இரவுகள் கொண்ட நகரங்கள்
மார்லா ஆலம்
எல் குசீர்
ஷர்ம் எல் ஷேக்
பகல் மற்றும் இரவுகளில் மிகவும் வெப்பநிலை ஏற்ற இறக்கத்துடன் உள்ள நகரங்கள்