முதலாம் நிக்கலாசு (Nicholas I, உருசியம்: Николай I Павлович, ஒ.பெ நிக்கலாய் I பாவ்லவிச்; 6 சூலை [யூ.நா. 25 சூன்] 1796 – 2 மார்ச் [யூ.நா. 18 பெப்ரவரி] 1855) உருசியப் பேரரசராக 1825 முதல் 1855 வரை பதவியில் இருந்தவர். இதே வேளையில் இவர் போலந்து மன்னராகவும், பின்லாந்து இளவரசராகவும் இருந்தார்.
நிக்கலாசு இவருக்கு முன்னர் பேரரசராக இருந்த முதலாம் அலெக்சாந்தரின் தம்பி ஆவார். அலெக்சாந்தர் 1825 திசம்பரில் இறந்த சில நாட்களில் இடம்பெற்ற திசம்பர் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இராணுவக் கிளர்ச்சி தோல்வியுற்ற போதிலும், மரபுரிமைக்கிணங்க முதலாம் நிக்கலாசு பேரரசராக முடிசூடினார்.[1] முதலாம் நிக்கலாசு ஒரு புறத்தே புவியியல் விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பாரிய தொழில்மயமாக்கல் போன்றவற்றால் குறிப்பிடத்தக்கவராக இருந்தாலும், மறுபுறத்தே நிர்வாகக் கொள்கைகளை மையப்படுத்துதல், கருத்து வேறுபாட்டை அடக்குதல் ஆகியவற்றின் மூலம் சர்ச்சைக்குரிய பிற்போக்குவாதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டார். இவரது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இவருக்கு ஏழு பிள்ளைகள், அனைவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள்.[2]
முதலாம் நிக்கலாசு தனது பதவிக்காலத்தில் ஒரு சுயாதீனமான கிரேக்க அரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார், 1826-1828 உருசிய-பாரசீகப் போரின்போது கஜார் பாரசீகத்தில் இருந்து ஜடார் மாகாணத்தையும் மீதமுள்ள இன்றைய ஆர்மீனியா மற்றும் அசர்பைஜானையும் கைப்பற்றியதன் மூலம் காக்கேசியாவை மீளக்கைப்பற்ற முடிந்தது. 1828-1829 உருசிய-துருக்கியப் போரையும் வெற்றிகரமாக முடித்தார். இருப்பினும், பின்னர், உருசியாவை 1853–1856 கிரிமியப் போருக்கு செல்ல வைத்தார். இது அங்கு பேரழிவைத் தந்தது. "முதலாம் நிக்கலாசின் ஆட்சி உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பேரழிவுகரமான தோல்வி" என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.[3] அவரது இறப்பிற்கு முன்னதாக, உருசியப் பேரரசு 20 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (7.7 மில்லியன் சதுர மைல்கள்) அதன் புவியியல் உச்சநிலையை அடைந்தது,
நிக்கலாசு 1855 மார்ச் 2 ஆம் நாள், கிரிமியப் போர்க் காலத்தில் சென் பீட்டர்ஸ்பேர்க், குளிர்கால அரண்மனையில் நுரையீரல் அழற்சியினால் இறந்தார்.[4] அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின.[5] அவரது உடல் சென் பீட்டர்சுபர்க் பீட்டர், பவுல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
குடும்பம்
முன்னோர்
முன்னோர்கள்: உருசியாவின் முதலாம் நிக்கலாசு |
---|
| | | | | | | 8. ஓல்சுடென்-கோட்டோர்ப் இளவரசர் சார்லசு-பிரெடெரிக் | | | | | | | 4. உருசியாவின் மூன்றாம் பீட்டர் | | | | | | | | | | 9. இருசியாவின் இளவரசி அன்னா பெத்ரோவ்னா | | | | | | | 2. உருசியாவின் முதலாம் பவுல் | | | | | | | | | | | | அனால்ட்-செர்ப்சுட் இளவரச்ர் கிறித்தியா ஆகுஸ்டு | | | | | | | 5. உருசியாவின் இரண்டாம் கத்தரீன் | | | | | | | | | | 11. ஓல்சுடென்-கோட்டோர்ப் இளவரசி யோவான்னா எலிசபெத் | | | | | | | 1. உருசியாவின் முதலாம் நிக்கலாசு | | | | | | | | | | | | | 12. ஊட்டர்ம்பர்க் இளவரசர் சார்லசு அலெக்சாந்தர் | | | | | | | 6. இரண்டாம் பிரெடெரிக் இயூஜின் | | | | | | | | | | 13. தூர்ன், டாக்சிசு இளவரசி மரீ ஆகுஸ்தி | | | | | | | 3. ஊட்டர்ன்பர்கின் இளவரசி சோஃபி டொரத்தியா | | | | | | | | | | | | 14. பிரான்டன்பர்க்-சுவெத் இளவரசர் பிரெடெரிக் வில்லியம் | | | | | | | 7. பிராண்டன்பர்க்-சுவெத் இளவரசி பிரீடெரிக் | | | | | | | | | | 15. புருசியாவின் இளவரசி சோஃபியா டொரத்தியா | | | | | | | | | | | | | | | | |
|
வாரிசுகள்
முதலாம் நிக்கலாசிற்கு மனைவி அலெக்சாந்திரா பியோதரவ்னாவிடம் இருந்து ஏழு சட்டபூர்வமான பிள்ளைகள்[6]
பெயர் |
பிறப்பு |
இறப்பு |
குறிப்புகள்
|
இரண்டாம் அலெக்சாந்தர் |
29 ஏப்ரல் 1818 |
13 மார்ச் 1881 |
திருமணம்: 1841, எசேயின் இளவரசி மரீ, வாரிசு உண்டு
|
இளவரசி மரியா நிக்கலாயெவ்னா |
18 ஆகத்து 1819 |
21 பெப்ரவரி 1876 |
திருமணம்: 1839, லியூக்டன்பர்கின் மூன்றாம் இளவரசர் மாக்சிமிலியன்; வாரிசு உண்டு
|
இளவரசி ஒல்கா நிக்கலாயெவ்னா |
11 செப்டம்பர் 1822 |
30 அக்டோபர் 1892 |
திருமணம்: 1846, ஊட்டர்ம்பர்க் இளவரசர் சார்லசு; வாரிசு உண்டு.
|
இளவரசி அலெக்சாந்திரா நிக்கலாயெவ்னா |
24 சூன் 1825 |
10 ஆகத்து 1844 |
திருமணம்: 1844, எசே-காசெல் இளவரசர் பிரெடெரிக் வில்லியம்; வாரிசு உண்டு
|
இளவரசர் கான்சுடன்டீன் நிக்கலாயெவிச் |
21 செப்டம்பர் 1827 |
25 சனவரி 1892 |
திருமணம்: 1848, சாக்சி-ஆல்ட்டன்பர்க் இளவரசி அலெக்சாந்திரா; வாரிசு உண்டு
|
இளவரசர் நிக்கலாசு நிக்கலாயெவிச் |
8 ஆகத்து 1831 |
25 ஏப்ரல் 1891 |
திருமணம்: 1856, ஓல்டன்பர்க் இளவரசி அலெக்சாந்திரா பெத்ரோவ்னா; வாரிசு உண்டு
|
இளவரசர் மைக்கேல் நிக்கலாயெவிச் |
25 அக்டோபர் 1832 |
18 திசம்பர் 1909 |
திருமணம்: 1857, பாடெனின் இளவரசி செசிலி; வாரிசு உண்டு
|
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
- ↑ Edward Crankshaw, The Shadow of the Winter Palace (Viking Press: New York, 1976) p. 13.
- ↑ Cowles, Virginia. The Romanovs. Harper & Ross, 1971. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-010908-0 p.164
- ↑ William C. Fuller, Jr., Strategy and Power in Russia 1600–1914 (1998) பக். 243.
- ↑ Peter Oxley, Russia: from Tsars to Commissars, Oxford University Press, (2001), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-913418-9.
- ↑ Yevgeny Anismov, Rulers of Russia, Golden Lion Press, St. Petersburg Russia (2012).
- ↑ Sebag Montefiore, p. 475
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
உருசியாவின் முதலாம் நிக்கலாசு ஆல்சுடைன்-கோத்தர்ப்-ரொமானொவ் மாளிகை Cadet branch of the ஓல்டன்பர்க் மாளிகை பிறப்பு: 6 சூலை 1796 இறப்பு: 2 மார்ச் 1855
|
அரச பட்டங்கள்
|
முன்னர்
|
போலந்து மன்னர் 1825–1830
|
காலியாக உள்ளது நவம்பர் எழுச்சி
|
உருசியப் பேரரசர் பின்லாந்து இளவரச்ர் 1825–1855
|
பின்னர்
|
காலியாக உள்ளது நவம்பர் எழுச்சி
|
போலந்து மன்னர் 1831–1855
|
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
கல்விசார் | |
---|
கலைஞர் | |
---|
மக்கள் | |
---|
மற்றவை | |
---|