இலங்கை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 365, ஒரே பாலின பாலியல் செயல்களில் ஈடுபடுவோரை குற்றவாளி என அறிவிக்கிறது. ஆனால் அறிக்கைகளின்படி இந்தச் செயல்கள் பல்வேறு வழிகளில் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன, நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது குற்றமற்றவை என்று குறிப்பிடப்படுகின்றன எனத் தெரிவிக்கிறது. [1] இருந்தபோதிலும் காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் ந,ந,ஈ,தி நபர்களைத் தாக்குதல், துன்புறுத்தல் மற்றும் பாலியல் மற்றும் பணமோசடிக்கு அச்சுறுத்தல் செய்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. [2][3][4]
இலங்கை அரசு அரசியலமைப்பு மனித உரிமைகள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான பாகுபாடு எதிர்ப்பு சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. [5] இந்தச் சட்டங்கள் மிக நீண்ட காலமாக திருநங்கைகளை அங்கீகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் திருநங்கைகளை அடையாளம் காண்பதனை இது எளிதாக்குகிறது. [6][7] இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் மூன்றாம் பாலினம் போன்ற கருத்துக்கள் இலங்கையிலும் உள்ளன. [8]
கண்ணோட்டம்
இலங்கை அரசியல் கட்சிகள் பல சிறிய கட்சிகளின் ஒப்பாய்வின் மூலம் உருவாகின்றன [9] முன்னாள் காலனித்துவ நெதர்லாந்து கட்சி கொள்கைகளை நினைவூட்டுகின்றன, [10][11] பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், பிரிவு 365 ஐ ஒருமித்த ஓரினச்சேர்க்கைக்கு சட்டப்படி பயன்படுத்த முடியாது என்றும் சிறிசேன மற்றும் ராஜபக்ச அரசுகள் தெரிவித்தது. [12] ஆனால் இதற்கு மாறாக சோசலிச கூட்டமைப்பு பழமைவாதத்தை அனுமதிக்க மறுத்தது. சட்ட நூல்களிலிருந்து பிரிவு 365 ஐ நீக்க அரசாங்கம் முயற்சித்தது. [13] பல அரசு சாரா நிறுவனங்கள், [14] சட்டமியற்றுபவர்கள் மற்றும் மத அமைப்புகள் [15][16] பாலியல் சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டன. வெளிப்படையாகவே தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் [17] மற்றும் திருநங்கைகள் என அறிவித்தவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக [18] ,நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதனைக் காணலாம். [19]
ஒரே பாலின பாலியல் செயல்களின் சட்டபூர்வமான தன்மை
பிரிவு 365 மற்றும் 365 ஏ
தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகள் இயற்கைக்கு மாறான குற்றங்கள் மற்றும் அநாகரிகமான செயல்களைக் குறிக்கின்றன. இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் "10 வருடங்களுக்கு மிகாமல் அபராதத்துடன், சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1948 முதல் இந்தச் சட்டத்தின்படி யாரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படவில்லை.[20][21]
நவம்பர் 2017 இல், துணை தலைமை அரசு வழக்கறிஞர் நெரின் புல்லே, ஒரே பாலின பாலியல் செயல்பாட்டை சட்டவிரோதமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். [22] நாட்டின் அரசியலமைப்பு, உச்சநீதிமன்றத்திற்கு ஒரு சட்டத்தை அரசியல் அமைப்பு நூலில் இருந்து முழுமையாக வெளியேற்றும் அதிகாரத்தை வழங்கவில்லை. [23][1] மனித உரிமைகள் செயல் திட்டத்தில் அதனை ரத்து செய்வதை உள்ளடக்கிய அரசாங்கத்தின் முயற்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது.
அரசு
ராஜபக்சவின் சோசலிச அரசாங்கம் மற்றும் சிறிசேனாவின் பழமைவாத அரசாங்கம் ஆகிய இரண்டும் "ந,ந,ஈ,தி மக்களுக்கு எதிரான பாகுபாடு, அரசியலமைப்புக்கு முரணானது என்றும், 365 மற்றும் 365 ஏ பிரிவுகள் ந,ந,ஈ,தி நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது" என்றும் கூறியுள்ளது. [24]
பிரிவு 399
இந்த பிரிவானது பாலின ஆள்மாறாட்டத்தை குற்றமாக்கியது மற்றும் பெரும்பாலும் திருநங்கைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபர் மற்றொரு பாலினமாக மாறிய சூழ்நிலைகளில் இது பயன்படுத்தப்படலாம்.
பிரிவு 07 /1841 வாக்ரண்ட்ஸ் ஆணை
இந்த செயல் பொது இடங்களில் அநாகரீக செயல்களில் ஈடுபவதனை குற்றமாக்குகிறது. இது பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சமாக ஆறு மாதங்கள் மற்றும் 100 ரூபாய் அபராதம் தண்டனையாக விதிக்கப்படுகிறது. [25]
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட பொதுவான பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலியல் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்று இலங்கை அரசு 7-8 அக்டோபர் 2014 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் கூறியது.[26] இத்தகைய பாதுகாப்புகள் இலங்கை அரசியலமைப்பில் "உள்ளார்ந்த உரிமைகளை " வழங்கக் கூடியவை என்றும் , 'வெளிப்படையான' உரிமைகளை வழங்கும் சட்டத்தை அரசாங்கம் இன்னும் உருவாக்கவில்லை என்றும் இலங்கை அரசு கூறியது. [27]
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு சட்டவிரோதமானது என்று பல சட்டத்தரணிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசியலமைப்பில் குறிப்பிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். [28]