இராய்ப்பூர் மத்திய சிறை (Raipur Central Jail) இந்தியாவின்சத்தீசுகர் மாநிலத்தில் அமைந்துள்ள 5 மத்திய சிறைகளில் இதுவும் ஒன்றாகும். [1][2] இந்த சிறையின் மொத்த கொள்ளளவு 1100 பேர். ஆனால் எந்த நேரத்திலும், சிறைச்சாலையின் கொள்ளளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான கைதிகள் இங்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரசு தொற்றுநோய் தாக்கியபோது இந்த சிறையில் பல கைதிகள் சாமீன் பெற்றனர். [3] இராய்ப்பூர் மத்திய சிறையானது ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பல சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு கைதிகளாக இருந்துள்ளனர். [4] 2016 ஆம் ஆண்டு, காந்தி செயந்தி அன்று (02-அக்டோபர்), குறைந்தபட்ச ஊதியம், வங்கிக் கணக்குகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றைக் கோரி, கைதிகள் சத்தியாகிரகம் எனற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். [5] 2019 ஆம் ஆண்டில், இராய்ப்பூர் மத்திய சிறையின் மருத்துவ அதிகாரிகளில் ஒருவர் பணக்கார கைதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஏழைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். [6]