இரன் பகதூர் சிங்

இரன் பகதூர் சிங்
Ran Bahadur Singh
அர்ரைய்யா தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957 முதல் 1962 வரை
அர்ரைய்யா தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1962 முதல் 1967 வரை
பின்னவர்புத்தி ராம்
மாநில சட்டமன்ற மேலவை, பசுத்தி
பதவியில்
1967 முதல் 1972 வரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1921
முரதிபூர், அர்ரைய்யா (மாவட்டம் - பசுத்தி)
இறப்பு1983
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சரசுவதி சிங்
பெற்றோர்சிவ் அரக்கு சிங் (தந்தை)
கல்விஇளநிலை சட்டம்
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம்

இரன் பகதூர் சிங் (Ran Bahadur Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் [1] மற்றும் ஓர் அரசியல்வாதியாவார். [2] 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் மற்றும் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3] இரன் பகதூர் சிங் அர்ரையாயாவில் பல கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். [1] 1947 ஆம் ஆண்டில் தேசிய இடைநிலைக் கல்லூரியை [1] தொடங்கினார், இது அர்ரையாவின் முதல் மூத்த மேல்நிலைப் பள்ளியாகும். பசுத்தி மாவட்டத்தில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்றாகவும் இப்பள்ளி கருதப்படுகிறது.

தேர்தல் வரலாறு

இரன் பகதூர் சிங் 1957 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிராந்திய அரசியலில் நுழைந்தார். பசுத்தி மாவட்டம், அர்ரைய்யா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். [4] மாகாண காங்கிரசு குழு உறுப்பினராகவும் இருந்தார். 1957 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையிலும் அர்ரைய்யா தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1967 ஆம் ஆண்டில், இரன் பகதூர் சிங் பசுத்தி சட்ட சபையிலிருந்து சட்டமன்றக் குழு உறுப்பினரானார்.

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!