இந்து மகாசபை அல்லது அகில பாரதிய இந்து மகாசபை (Akhil Bharatiya Hindu Mahasabha), இந்து தேசியவாதம் கொள்கை கொண்ட ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். பிரித்தானிய இந்தியப் பேரரசிடமிருந்து இந்துக்களின் உரிமைகளைக் காப்பதற்கு இந்து மகாசபை கட்சி 1915இல் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் இந்திய அரசியலில் இந்து மகாசபையின் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.
இந்தியாவிலிருந்து, பாகிஸ்தானை பிரிக்கும், முகமது அலி ஜின்னா-ஜவகர்லால் நேருவின் திட்டத்தை இந்து மகாசபை கடுமையாக எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட இந்து-இசுலாமியர்கள் மோதல்களில், மகாத்மா காந்தி, இசுலாமியர்கள் சார்பில், இந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய காரணத்தினால், இந்து மகாசபை கட்சியைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, 30 சனவரி 1948இல் தில்லியில் மகாத்மா காந்தியை சுட்டு கொன்றார். காந்தி கொலை வழக்கில் வினாயக் தாமோதர் சாவர்க்கர் கைது செய்த அரசு, பின்னர் விடுவித்தது. 1951 இல் சியாமா பிரசாத் முகர்ஜி, இந்து மகாசபை கட்சியை விட்டு வெளியேறி, பாரதிய ஜனசங்கம் கட்சியை தோற்றுவித்தார்.
புதுச்சேரி மாநிலம்
இக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட புதுச்சேரி மாநில தலைவர் திரு இராஜ தண்டபாணி ஆவார்.[4] ஹனுமான் ஜெயந்தி அன்று அயோத்தியாவிற்க்கு குடை யாத்திரை வருடந்தோறும் நடைபெறுகிறது.[5] ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு நடத்துகிறது.[6]