ஆகாசா ஏர் (Akasa Air), இந்தியாவின்மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் ஆகும்.[5] எஸ்என்வி ஏவியேசன் பிரைவேட் லிமிடெடின் வணிகக்குறியீட்டான இதை வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோர் நிறுவினர்.[4]
இந்நிறுவனம், 7 ஆகஸ்ட் 2022 அன்று மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான போயிங் 737 மேக்ஸ் விமானத்தினை இயக்கி தனது வணிகச் செயல்பாட்டினை துவங்கியது.[6] மொத்தம் 72 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.[7]