அமோனியம் ஆர்சனேட்டு(Ammonium arsenate) என்பது (NH4)3 AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் ஆர்சனிக் அமிலக் கரைசலுடன் அமோனியா சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் முதலில் நிறமற்ற படிகங்களான முந்நீரேற்று வடிவம் வீழ்படிவாக்கப்படுகிறது[1]. மேலும் இதை சூடாக்குவதன் வாயிலாக அமோனியம் வெளிவிடப்பட்டு அமோனியம் ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது.
மற்ற ஆர்சனிக் சேர்மங்களைப் போலவே இதுவும் மனிதர்களுக்கு புற்றுநோய் உண்டாக்கும் சேர்மம் என்ற வகைப்பாட்டில் வைக்கப்படுகிறது[2].
மேற்கோள்கள்
↑"Ammonium Orthoarsenate" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 602.