அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வும் மாநாடும் மார்சு 2014 முதலாம் திகதி அன்று கனடாவில், ரொறன்ரோவில் நடைபெற்ற ஒரு மாநாடும் நிகழ்வும் ஆகும். இது தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெற்றது. பெண்களின் உரிமைகள், தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், குறிப்பாக ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள், கொடுமைகள் உட்பட்ட பல விடயங்களை இந்த மாநாடு ஆய்ந்தது.
இந்த மாநாட்டினை கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு ஒழுங்குசெய்தது. இதில் பல்லின பெண்கள் அமைப்புகளும் கலந்து கொண்டன.[1]
மேற்கோள்கள்
- ↑ கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் நடாத்திய அனைத்துலகப் பெண்கள் நாள் நிகழ்வும் மாநாடும்
வெளி இணைப்புகள்