2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்

2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்
இடம்இந்தியா பெங்களூர், கர்நாடகம், இந்தியா
நாள்ஜூலை 25 2008
தாக்குதல்
வகை
குண்டுவெடிப்புகள்
இறப்பு(கள்)3
காயமடைந்தோர்20

2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் என்பது ஜூலை 25, 2008 மாலை 1:30 மணிக்கு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். மொத்தத்தில் ஒன்பது குண்டுவெடிப்புகளில் மூன்று பேர் உயிரிழந்து மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்[1]. இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம், லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய இரண்டு தீவிரவாதி குழுமங்களும் இந்த குண்டுவெடுப்பை செய்திருக்கலாம் என்று பெங்களூர் காவல்துறையும் இந்திய அறிவு முகமையும் கூறியுள்ளன. இதனால் பெங்களூரின் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மூடப்பட்டன.

இதற்கு ஒரு நாள் பிறகு அகமதாபாதில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்து 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடிப்பு இடங்கள்

முதல் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:20, மடிவாலா பேருந்து நிறுத்தம்
இரண்டாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:25, மைசூர் சாலை
மூன்றாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 1:40, அடுகுடி
நான்காம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:10, கோரமங்கள
ஐந்தாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:25, விட்டல் மால்யா சாலை
ஆறாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:35, லாங்ஃபர்ட் டவுன்
ஏழாம் குண்டுவெடிப்பு: ரிச்மண்ட் டவுன்[2]

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!