2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் என்பது 2008இல்அக்டோபர் 1ஆம் தேதி திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த தீவிரவாத தாக்குதல். இச்சம்பவத்தில் 45 நிமிடங்களில் ஐந்து குண்டுகள் வெடித்து குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். ஒரே வாரத்தில் இந்தியாவில் இதுவே நான்காம் குண்டுவெடிப்பு நிகழ்வு. இந்திய காவல்துறை ஹூஜி தீவிரவாத அமைப்பை சந்தேகப்படுகிறது.