வெள்ளை ஒரு நிறமாகும் இவ்வுணர்வு மனிதக் கண்ணில் காணப்படும் நிறத்தை அறியக்கூடிய மூன்று வகை கூம்புக் களங்களை கிட்டத்தட்ட நிகரான அளவின் தூண்டுவதும் சுற்றுப்புறச் சூழலைவிட கூடிய ஓளிர்மையைக் கொண்டதுமான ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது. வெள்ளை உணர்வு சாயல் (hue), சாம்பல் நிறம் (grayness) அற்றதாக காணப்படும்.[1]வெள்ளொளியை பலவாறாக உண்டாக்க முடியும். சூரியன் அவ்வாறனதொரு மூலமாகும். மின்சார வெண்சுடர் இன்னொரு மூலமாகும். தற்கால ஒளிமூலங்களான உடனொளிர் விளக்கு, ஒளிகாவும் இருமுனையம் போன்றவையும் வெள்ளொளி மூலங்களாகும். தனது மேற்பரப்பில் பட்டுத் தெறிக்கும் ஒளியை மாற்றதாக எப்பொருளும் வெள்ளை நிறமாகத் தோன்றும்.
பூக்கள், முகில்கள், தூவிப்பனி போன்றவை வெள்ளை நிறமாக தோன்றுவதால் மானிட கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம் என்பவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது. வெள்ளை, கருப்பு நிறங்களிடையே காணப்படும் பாரிய வேறுபாட்டால் இவை வேற்றுமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. சீன கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் சாவைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
↑Wyszecki & Stiles. Color Science. p. 506. {{cite book}}: Unknown parameter |edtion= ignored (help)
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!