விக்கிப்பீடியா:கண்ணியம்

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


எப்போதும் உதவிட முனைப்பாகவும் தீங்கு செய்யாதிருக்கவும் முயலுங்கள். விக்கிப்பீடியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் பங்குண்டு. கருத்து வேறுபாடுகள் தோன்றும்போது விவாதங்கள் நிகழ்வது இயல்பே. இவை கண்ணியத்துடன் நிகழ்வது இன்றியமையாதது. ஆனால் விவாதங்களின் தீவிரத்தில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும். விக்கிப்பீடியாவின் செயல்பாட்டிற்கு இப்போக்கு ஊறு விளைவிக்கும்:

  • கண்ணியமற்ற செயல்பாடு பிற பயனர்களை துயரமடையச் செய்யும். அவ்வாறு துயருற்ற பயனர்கள் பங்களிக்காது விலகக் கூடும்.
  • சிலரைக் கோபமடையச் செய்யும். கோபமடைந்தவர்கள் உதவிகரமாக இல்லாது பிறரையும் கோபமடையச் செய்வர்.
  • கோபமுற்றவர் பிறரின் காரணங்களைக் கேட்க ஆயத்தமாக இருக்க மாட்டார்கள். இதனால் ஓர் உடன்பாடு காணுதல் மேலும் கடினமாகும்.
  • ஒருவர் ஏற்படுத்திய மாற்றங்களை மட்டுமே பேச வேண்டும், அவர்களைப் பற்றியல்ல.
  • எப்போதுமே கண்ணியக் குறைவோடு செயல்பட்டால் தடை செய்யப் படலாம்.

எடுத்துக்காட்டுகள்

__DTELLIPSISBUTTON__{"threadItem":{"headingLevel":2,"name":"h-","type":"heading","level":0,"id":"h-\u0b8e\u0b9f\u0bc1\u0ba4\u0bcd\u0ba4\u0bc1\u0b95\u0bcd\u0b95\u0bbe\u0b9f\u0bcd\u0b9f\u0bc1\u0b95\u0bb3\u0bcd","replies":[]}}-->
  • ஒருவரின் இனம், பால், குழு, நாடு, மொழி மற்றும் மதம் குறித்த கீழான சொற்களைக் கூறுதல்.
  • பிற பயனரைக் குறித்து பொய் கூறுதல்.
  • கடுமையாக நடந்து கொள்ளுதல்.
  • தொகுத்தல் சுருக்கங்களில் பிறரின் தொகுத்தல் குறித்து இழிவாகக் கூறுதல் (காட்டு:"மட்டமான தமிழ் பெயர்ப்பு," "அறியாது தொகுத்தல்")
  • நீங்கள் இன்னார்தான் செய்தார் என அறியாமலே அவரைக் குறை கூறுவது.
  • பிறரின் பயனர் பக்கத்தைச் சிதைப்பது.
  • பயனர்களின் மொழியறிவு அல்லது இலக்கணம் குறித்து எள்ளுவது
  • ஏதேனும் சிறு தவறு செய்த பயனரைத் தடை செய்ய வேண்டுவது.
  • "ஒன்றும் தெரியாதவர் போன்று நடிப்பது"

வழிகாட்டல்கள்

__DTELLIPSISBUTTON__{"threadItem":{"headingLevel":2,"name":"h-","type":"heading","level":0,"id":"h-\u0bb5\u0bb4\u0bbf\u0b95\u0bbe\u0b9f\u0bcd\u0b9f\u0bb2\u0bcd\u0b95\u0bb3\u0bcd","replies":[]}}-->

உதவிகரமாக இல்லாதிருப்பதைத் தடுக்கும் வண்ணம் இவற்றைச் செயல்படுத்தலாம்:

  • கடுமையாகவும் மரியாதையின்றியும் உள்ள மறுமொழிகளுக்குப் பதில் கூறாதிருத்தல்.
  • விக்கிப்பீடியாவிலிருந்து சிறு விடுப்பு எடுத்துக் கொள்ளுதல்.
  • இன்னா செய்தாருக்கும் நன்மை பயக்கும் வண்ணம் செயல்படல்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!