யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize), என்பது உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகையாளர், அமைப்பு, அல்லது ஒரு நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் யுனெஸ்கோ விருதாகும். இவ்விருது 1997 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க டாலர் 45,000 பரிசு உலகப் பத்திரிகை சுதந்திர நாளான மே 3 ஆம் நாள் ஆண்டு தோறும் எல் எசுப்பட்டாடோர் என்ற கொலம்பிய நாளிதழின் ஆசிரியர் கிலெர்மோ வானோ இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 1986 டிசம்பர் 17 ஆம் நாள் பொகொட்டாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலொம்பியாவில் போதைப் பொருள் கடத்துவோருக்கு எதிராகப் பலமாகக் குரல் கொடுத்து வந்தவர்.
ஆண்டு தோறும், யுனெஸ்கோ நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சுயாதீன நபர்களைக் கொண்ட குழு ஒன்று அரச சார்பற்ற அமைப்புகளினாலும், யுனெஸ்கோ உறுப்பு நாடுகளினாலும் பரிந்துரைக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகளில் இருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கின்றது.
விருது பெற்றவர்கள்
- 2014: அகமெத் சீக், துருக்கி[1]
- 2013: ரீயொட் அலெமு, எத்தியோப்பியா[2]
- 2012: எய்னுல்லா பத்துல்லாயெவ், அசர்பைஜான்[3]
- 2011: அகமது செய்தபாதி, ஈரான்
- 2010: மோனிக்கா கொன்சாலெசு முகிக்கா, சிலி
- 2009: லசந்த விக்கிரமதுங்க, இலங்கை (இறப்பின் பின்னர்)[4]
- 2008: லீடியா ரிபெய்ரோ, மெக்சிக்கோ
- 2007: அன்னா பொலித்கொவ்ஸ்கயா, உருசியா (இறப்பின் பின்னர்)
- 2006: மேய் சிதியாக், லெபனான்
- 2005: செங் யிசொங், சீன மக்கள் குடியரசு
- 2004: ராவுல் ரிவேரோ, கூபா
- 2003: அமிரா ஆஸ், இசுரேல்
- 2002: ஜெப்ரி நியரோட்டா, சிம்பாப்வே
- 2001: வின் தின், மியான்மர்
- 2000: நிசார் நயூப், சிரியா
- 1999: யேசுஸ் பிளான்கோர்னாலெசு, மெக்சிகோ
- 1998: கிறிஸ்டீனா அன்யான்வு, நைஜீரியா
- 1997: காவோ யூ, சீனா
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்