மேவாரி மொழி

மேவாரி மொழி எனப்படுவது, ராஜஸ்தானி மொழியின் முக்கியமான கிளைமொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஆரியப் பிரிவுள் அடங்கியது. இது ராஜ்சமந்த், பில்வாரா, உதய்ப்பூர், சித்தோர்கர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம்மொழி எழுவாய் - செயப்படுபொருள் - பயனிலை என்னும் சொல்லொழுங்கைக் கொண்ட ஒரு மொழியாகும். மேவாரி மொழியில், 31 மெய்கள், 10 உயிர்கள், இரண்டு கூட்டுயிர்கள் ஆகியவை உள்ளன.

பல்லின உரசொலிகள் இம்மொழியில் தொண்டையின வெடிப்பொலிகளாக மாற்றம் பெற்றுள்ளன. ஒருமை, பன்மை என்னும் இரு எண்களும்; ஆண்பால், பெண்பால் என்னும் இரு பால்களும்; மூன்று வேற்றுமைகளும் இம்மொழியில் உள்ளன.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!