மூன்றாம் குமாரகுப்தர் (Kumaragupta III) பிற்கால குப்தப் பேரரசர் ஆவார். இவரது தந்தை நரசிம்மகுப்தருக்குப் பின் கி பி 530-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய மூன்றாம் குமாரகுப்தர், கி பி 540 முடிய ஆட்சி புரிந்தார். கி பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுவில் ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூணர்கள், குப்தப் பேரரசை வடமேற்கிலிருந்து தொடர்ந்து தாக்கினர். மால்வா மன்னர் யசோதர்மனும், மூன்றாம் குமாரகுப்தரும்]] இணைந்து, ஹூணர்களின் தலைவன் மிகிரகுலனை கி பி 528-இல் தோற்கடித்தனர்.
1889-இல் பிதாரியில் கிடைத்த இவரது வெள்ளி நாணயங்கள் மற்றும் செப்பு மற்றும் வெள்ளி முத்திரைகள் மூலம், இவரது தந்தை நரசிம்மகுப்தர் மற்றும் பாட்டன் புருகுப்தர் என அறிய முடிகிறது.[1][2] மேலும் நாளந்தாவில் கிடைத்த களிமண் முத்திரைகள் மூலம், முதலாம் குமாரகுப்தன் – ஆனந்ததேவிக்கும் பிறந்தவரே புருகுப்தர் எனக் குறிப்பிடுகிறது. இவருக்குப் பின் இவரது மகன் விஷ்ணுகுப்தர் அரியணை ஏறினார்.
குப்தப் பேரரசு, இவரது ஆட்சிக் காலத்தில் ஹூணர்களின் தொடர் தாக்குதல்களால் வீழ்ச்சிப் பாதையில் சென்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்