முன்னாள் கல்லூரி

டேனியல் செஸ்டர் பிரஞ்சு என்பவரால் 1903இல் உருவாக்கப்பட்ட அல்மா மேட்டர் சிலை, கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க்.

முன்னாள் கல்லூரி (அல்மா மேட்டர் (Alma mater இலத்தீன்: alma mater ) என்பது ஒருவர் முன்னர் பயின்ற பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தை அடையாளம் காண தற்போது பயன்படுத்தப்படும் ஒரு லத்தீன் உருவகச் சொற்றொடர்.[1][2][3]

அதன் தற்போதைய பயன்பாட்டிற்கு முன், அல்மா மேட்டர் என்பது பல்வேறு தாய் தெய்வங்களைக் குறிப்பிடும் மரியாதைக்குரியச் சொல்லாக இருந்தது. குறிப்பாக, சேரீசு அல்லது சைபலியினைக் குறிப்பிட்டது.[4] பின்னர், கத்தோலிக்க மதத்தில், இயேசுவின் தாயான மரியாளின் பெயரானது.

உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக தொடர்ந்து இயங்கி வரும் பல்கலைக்கழகத்தின் வரலாற்று நிலையைக் கொண்டாடும் வகையில் , போலோக்னா பல்கலைக்கழகம் அல்மா மேட்டர் ஸ்டுடியோரம் ("படிப்புகளின் தாய்") என்பதனை ஏற்றுக்கொண்டபோது, இந்தச் சொல் கல்விப் பயன்பாட்டிற்கு வந்தது.[5]

இந்த வார்த்தை பழைய மாணவர்களுடன் தொடர்புடையது, அதாவது "செவிலி" அல்லது "பேணி வளர்ப்பவர்", எனப் பொருள் தரக்கூடியதாக இருந்தாலும் பட்டதாரிக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6]

சொற்பிறப்பியல்

1600 இல் கேம்பிரிட்ஜிற்கான ஜான் லெகேட்டின் அல்மா மேட்டர்

அல்மா (பேணிக் காப்பவர்) என்பது சேரீசு, சைபலே, வீனஸ் மற்றும் பிற தாய் தெய்வங்களுக்கு ஒரு பொதுவான அடைமொழியாக இருந்தாலும், பாரம்பரிய லத்தீன் மொழியில் இதன் பின்னொட்டான மேட்டர் என்பதுடன் இணைத்துப் பயன்படுத்தப்படவில்லை.[7]

உரோமின் வீழ்ச்சிக்குப் பிறகு , இயேசுவின் தாய் மரியாவுடன் இணைந்து இந்த வார்த்தை கிறித்துவ வழிபாட்டுப் பயன்பாட்டிற்கு வந்தது. " மண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே! " என்பது பதினோராம் நூற்றாண்டில் நன்கு அறியப்பட்ட மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோயில் இணைக்குழுப் பாட்டு ஆகும்.[7]

1600 ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக அச்சுப்பொறியாளரான ஜான் லெகேட், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் ஒரு சின்னத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, ஆங்கிலம் பேசும் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தை அடையாளப்படுத்த இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதாக முதன்முதலாக ஆவணப்படுத்தப்பட்டது .[8][9] வில்லியம் பெர்கின்சின், எ கோல்டன் செயின் புத்தகத்தின் தலைப்புப் பக்கத்தில் இந்தச் சின்னம் முதன்முதலாக இருந்தது. அதில் அல்மா மேட்டர் கான்டாப்ரிஜியா ("ஊட்டமளிக்கும் தாய் கேம்பிரிட்ஜ்") என்ற லத்தீன் சொற்றொடர் நிர்வாண நிலையில், பாலூட்டும் பெண்ணைத் தாங்கிய பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.[10][11]

ஆங்கில சொற்பிறப்பியலில், பெரும்பாலும் பல்கலைக்கழகம் தொடர்பான முதல் பயன்பாடு 1710 எனக் குறிப்பிடப்படுகிறது, ரிச்சர்ட் வார்டு என்பவரால் ஹென்றி மோரின் நினைவாக ஒரு கல்வித் தாய் உருவம் குறிப்பிடப்பட்டது.[12][13]

சான்றுகள்

  1. "alma", oxforddictionaries.com. Retrieved October 11, 2018.
  2. "Definition of 'Alma mater'". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
  3. Ayto, John (2005). Word Origins (2nd ed.). London: A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408101605. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  4. Shorter Oxford English Dictionary, 3rd edition
  5. "Our history – University of Bologna". Unibo.it. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  6. Cresswell, Julia (2010). Oxford Dictionary of Word Origins. Oxford University Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199547937. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  7. 7.0 7.1 Sollors, Werner (1986). Beyond Ethnicity: Consent and Descent in American Culture. Oxford University Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198020721.Sollors, Werner (1986). Beyond Ethnicity: Consent and Descent in American Culture. Oxford University Press. p. 78. ISBN 9780198020721.
  8. Stokes, Henry Paine (1919). Cambridge stationers, printers, bookbinders, &c. Cambridge: Bowes & Bowes. p. 12. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  9. Roberts, S. C. A History of the Cambridge University Press 1521–1921. Cambridge: Cambridge University Press. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  10. Stubbings, Frank H. (1995). Bedders, Bulldogs and Bedells: A Cambridge Glossary. p. 39.
  11. Perkins, William (1600). A Golden Chaine: Or, the Description of Theologie, containing the order and causes of salvation and damnation, according to God's word. Cambridge: University of Cambridge. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  12. Harper, Douglas. "Alma mater". Online Etymological Dictionary. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  13. Ward, Richard. The Life of the Learned and Pious Dr. Henry More, Late Fellow of Christ's College in Cambridge. London: Joseph Downing. p. 148. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!