இசபெல்லா, போத்துக்கல் அரசி (1470-1498) ஜோன் ஜொவான்னா மரீயா (போர்த்துக்கல் அரசி) கத்தரீன், இங்கிலாந்து அரசி
தந்தை
இரண்டாம் ஜோன்
தாய்
போர்த்துக்கலின் இசபெல்லா
கையொப்பம்
முதலாம் இசபெல்லா (ஸ்பானிய மொழி: Isabel I, Ysabel) இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய ஸ்பெயினின் பகுதி) அரசியாக இருந்தார். இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள்.
தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்
இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.
கொலம்பஸ்
கிறிஸ்டோஃபர் கொலம்பசின் நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார்.
(கொலம்பஸ் அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டுப் புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும் வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும்)
ஆணுக்குப் பெண் நிகர்
தன் துணைவருடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களின் சமஉரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.
சாதனைகள்
ஸ்பெயினை ஒருங்கிணைத்தது
கொலம்பசை ஆதரித்தது
அடுத்த நூற்றாண்டுக்கான இராணுவக் கட்டமைப்பை அமைத்து வைத்தது
புனிதர் பட்டத்திற்கான பாதையில்
இசபெல்லாவிற்கு போப்பரசரால் கடவுளின் பணியாளர் (servant of god) பட்டம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் யூத அமைப்புகளின் எதிர்ப்பால் புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை.
சிறப்பிக்கப்படல்
அமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!