மீத்திறச் சிற்றினம் (Super Species) சில நேரங்களில் ஒரு "பிரதிநிதி" சிற்றினத்தைச் சுற்றியுள்ள நிலையினைக் குறிப்பதாகும்.[1][2] இது முறைசாரா தரமாகப் பயன்படுத்தப்படுகிறது. பெர்ன்ஹார்ட் ரென்ச் மற்றும் பின்னர் எர்ன்ஸ்ட் மேயர் ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்டது. ஒரு மீத்திறச் சிற்றினங்களை உருவாக்கும் சிற்றினங்கள் இடம் சார்ந்த பரவல்களைக்[3] கொண்டிருக்க வேண்டும் என்ற ஆரம்பத் தேவையுடன் மீத்திறன் சிற்றினக் கூறு முன்மொழியப்பட்டது.[3]
உதாரணம்
ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து உருவான தொடர்புடைய உயிரினங்கள் குழுவாக மீத்திறச் சிற்றினம் எனப்படுகிறது. வேறுபட்ட வரம்புகளில் வாழ்கின்றன. உதாரணமாக கருந்தொண்டை பச்சை கதிர்குருவி குழுவாகும். இக்குழுவில் டவுன்சென்ட், ஹெர்மிட், பொன்-கன்னம் மற்றும் கருப்பு-தொண்டை சாம்பல் கதிர்குருவிகளை உள்ளடக்கியது. இக்குழு ஒரு மீத்திறத் சிற்றினத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மேற்கண்ட குழுவில் உள்ள பிந்தைய நான்கு இனங்கள் ஒவ்வொன்றும் கருந்தொண்டை பச்சை மூதாதையரிடமிருந்து உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. கருந்தொண்டை பச்சைக் கதிர்குருவியினம், தென்கிழக்கு அமெரிக்காவின் இலையுதிர் வனப்பகுதியிலிருந்து மிக சமீபத்திய பனிப்பாறை முன்னேற்றங்களால் உருவாக்கப்பட்ட ஊசியிலையுள்ள காடுகளாக விரிவடைந்ததால், இடத் தனிமை ஏற்பட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட கதிர்குருவிகளின் தலைமுறைகள் மேற்கு மற்றும் வடக்கு, கீழ்வட அமெரிக்கா முழுவதும் மெதுவாக பரவின். ஒவ்வொரு குருவிகளின் குழுவும் வேறுபட்ட "குழுவாக" மாறியது. இனப்பெருக்க தனிமைப்படுத்தலால் மரபணு ஓட்டம் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக ஐந்து இனங்கள் பல்வேறு இடப் பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன, ஆனால் அவற்றின் தனித்துவமான பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.[4]
மேற்கோள்கள்
↑"Drosophila koepferae: a new member of the Drosophila serido (Diptera: Drosophilidae) superspecies taxon". Annals of the Entomological Society of America81 (3): 380–385. 1988. doi:10.1093/aesa/81.3.380.
↑Morse, D. H. and A. F. Poole (2020). Black-throated Green Warbler (Setophaga virens), version 1.0. In Birds of the World (P. G. Rodewald, Editor). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.btnwar.01