மிதப்புயரம்

கப்பலின் முன்புறத்தில் மிதப்புயரக் குறிகள்

ஒரு கப்பல் அடிப்பகுதியின் மிதப்புயரம் (draft) என்பது, நீர்மட்டத்துக்கும் கப்பலின் அடிமட்டத்துக்கும் இடையில் உள்ள நிலைக்குத்துத் தூரம் ஆகும். மிதப்புயரம், ஒரு கப்பல் அல்லது படகு பயணம் பாதுகாப்பாகச் செய்யக்கூடிய ஆகக்குறைவான நீரின் ஆழத்தைக் குறிக்கும். மிதப்புயரத்தை அறிவதன் மூலம் நீரின் மொத்த இடப்பெயர்ச்சியைக் கணித்து, ஆர்க்கிமிடீசின் விதியைப் பயன்படுத்துவதன் மூலம் கப்பலில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளின் எடையைக் கணிக்க முடியும். கப்பல் கட்டுமிடத்தில் தயாரிக்கப்படும் ஒரு அட்டவணை ஒவ்வொரு மிதப்புயரத்துக்கும் எவ்வளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படும் என்பதைக் காட்டும்.

[1][2][3]

மேற்கோள்கள்

  1. Barrass, C. B. (2009). Ship Squat and Interaction. Edinburgh: Witherby Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905331-60-4.
  2. "Glossary of Shipbuilding Terms S-Z". US Navy Naval History and Heritage Command. Archived from the original on 2017-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-02-15.
  3. "Draft Surveys: Methodology, Calculations, and common errors". 19 October 2020.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!