மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama, பிறப்பு: சனவரி 17, 1964) அமெரிக்க வழக்கறிஞரும், எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரான பராக் ஒபாமாவின் மனைவியும், முதலாவது ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார். சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பின்னர் சிகாகோ நகர முதல்வர் ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.
2007, 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.[1][2]
எழுதிய புத்தகங்கள்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
கல்விசார் | |
---|
கலைஞர் | |
---|
மக்கள் | |
---|
மற்றவை | |
---|