மாங்கனீசு(II) அசிட்டேட்டு(Manganese(II)acetate) என்பது Mn(CH3CO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் நீரேற்றுகள் Mn(CH3CO2)2.(H2O)n என்ற பொதுவாய்ப்பாட்டுடன் காணப்படுகின்றன. இங்குள்ள n = 0, 2, 4. என்ற எண்களைக் குறிக்கிறது. ஒரு வினையூக்கியாகவும் உரமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது[3].
தயாரிப்பு
மாங்கனீசு(II,III) ஆக்சைடு அல்லது மாங்கனீசு(II) கார்பனேட்டு போன்ற சேர்மங்களில் ஒன்றை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தி மாங்கனீசு(II) அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது :[4]
</ref>
MnCO3 + 2 CH3CO2H → Mn(CH3CO2)2 + CO2 + H2O.
கட்டமைப்பு
நீரற்ற மாங்கனீசு(II) அசிட்டேட்டும் இருநீரேற்று மாங்கனீசு(II) அசிட்டேட்டும் (Mn(CH3CO2)2.2H2O) ஒருங்கிணைவுப் பலபடிகளாகும். இருநீரேற்று வடிவம் எக்சு கதிர் படிகவியல் ஆய்வு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாங்கனீசு(II) மையமும் ஆறு ஆக்சிசன் மையங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த ஆக்சிசன் மையங்கள் நீர் ஈந்தணைவிகளாலும் அசிட்டேட்டுகளாலும் வழங்கப்படுகின்றன.