மலாய் தீபகற்பம் (Malay Peninsula, மலாய்: Semenanjung Tanah Melayu, தாய் மொழி: คาบสมุทรมลายู) தென்கிழக்காசியாவில் உள்ள மூவலந்தீவு ஆகும். ஏறத்தாழ வடக்கு-தெற்காக அமைந்துள்ள இந்நிலப்பகுதியின் தென்கோடி முனை ஆசிய நிலப்பகுதியின் தென்கோடி முனையாக விளங்குகிறது. இதில் மியான்மர், மலேசியத் தீபகற்பம், தெற்கு தாய்லாந்தின் தென்கோடி முனைகள் அடங்கியுள்ளன.
தெனாசெரிம் மலைகளின் அங்கமான தித்திவாங்சா மலைகள் இத்தீபகற்பத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன.[1] மலாக்கா நீரிணை மலாய் தீபகற்பத்தையும் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவையும் பிரிக்கிறது. யோகார் நீரிணை தென் கடற்கரையை சிங்கப்பூர் தீவிலிருந்து பிரிக்கிறது.
அரசியல் பிரிவுகள்
மலாய் மூவலந்தீவு மூன்று அரசியல் பிரிவுகளாகப் பிரிபட்டுள்ளது. அவையாவன:
மேற்சான்றுகள்
- ↑ The Physical Geography of Southeast Asia, Avijit Gupta