மதுபாலா (Madhubala இயற்பெயர்: மும்தாஜ் ஜெஹான் பேகம் தெஹ்லவி; 14 பிப்ரவரி 1933 - 23 பிப்ரவரி 1969) இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த ஓர் இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பொழுதுபோக்காளர்களில் ஒருவராக இருந்தார்.[1][2] 20 ஆண்டுகளுக்கும் திரைவாழ்க்கையில் 1969 இல் இறக்கும் வரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தில்லியில் பிறந்து வளர்ந்த மதுபாலா, தனது 8வது வயதில் குடும்பத்துடன் மும்பைக்குக் குடிபெயர்ந்தார், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1940களின் பிற்பகுதியில் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்தார். மேலும், நீல் கமல் (1947) மற்றும் அமர் (1954), திகில் படமான மஹால் (1949), மற்றும் காதல் திரைப்படங்களான பாதல் (1951) மற்றும் தாரணா (1951) ஆகிய திரைப்படங்களின் வெற்றி மூலம் பரவலாக அறியப்பட்டார். ஒரு சிறிய பின்னடைவைத் தொடர்ந்து, ஹவுரா பிரிட்ஜ் மற்றும் காலா பானி ஆகிய குற்றப் படங்கள் மிஸ்டர் & மிஸஸ் '55 (1955), சல்தி கா நாம் காடி (1958) மற்றும் ஹாஃப் டிக்கெட் (1962) ஆகிய நகைச்சுவைப் படங்களில் நடித்ததன் மூலம் மதுபாலா சர்வதேச அளவில் பிரபலமடைந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தில்லியில் மும்தாஜ் ஜெஹான் பேகம் தெஹ்லவி பிறந்தார். [3] அதாவுல்லா கான் மற்றும் ஆயிஷா பேகத்தின் பதினொரு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தை ஆவார். [4] மதுபாலாவின் உடன்பிறந்தவர்களில் குறைந்தது நான்கு பேராவது கைக்குழந்தையாக இருக்கும் போதே இறந்தனர்; [5] மதுபாலா வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாட்டுடன் பிறந்தார், இது அந்த சமயத்தில் எந்த சிகிச்சையும் இல்லாத பிறவி இதயக் கோளாறு ஆகும்.[6][7]
மதுபாலா தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை தில்லியில் கழித்தார் மற்றும் எந்தவிதமான உடல்நலப் பிரச்சினைகளும் இல்லாமல் வளர்ந்தார். [4] அவர்களின் முஸ்லீம் தந்தையின் மரபுவழிக் கருத்துகளின் காரணமாக, மதுபாலா அல்லது ஜாஹிதாவைத் தவிர அவரது சகோதரிகள் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. [8][9] மதுபாலா உருது, இந்தி மற்றும் அவரது தாய்மொழியான பஷ்தூ ஆகிய மொழிகளை தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் கற்றுக்கொண்டார்.[10][11] பழமைவாத வளர்ப்பு மகளாக இருந்தபோதிலும், ஒரு திரைப்பட நடிகராக ஆவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இதனை அவரது தந்தை ஏற்கவில்லை. [5]
தொழில் வாழ்க்கை
ஆரம்பகாலங்களில்
1941இல் , கான், மதுபாலா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மும்பைக்கு இடம்பெயர்ந்து, பம்பாயின் மலாடு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் குடியேறினர். [12][13]நிர்வாகிகளின் ஒப்புதலைத் தொடர்ந்து, பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில், பசந்தில் (1942) ஒரு இளம் கதாபாத்திரத்தில் ₹ 150 சம்பளத்தில் மதுபாலாவை ஒப்பந்தம் ஆனார்.[14][15] ஆனால் மதுபாலாவின் பணி பாராட்டுகளைப் பெற்றாலும், அந்த நேரத்தில் குழந்தை நடிகர் தேவைப்படாததால் அந்தப் படமனை அவரது ஒப்பந்தத்தை கைவிட்டது. [12] ஏமாற்றமடைந்த கான் மீண்டும் தனது குடும்பத்தை தில்லிக்குத் திரும்பச் செய்ய வேண்டியதாயிற்று. பின்னர் அவர் நகரத்தில் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வேலைகளைச் செய்தார். [8]
தனிப்பட்ட வாழ்க்கை
ஒரு மரபுவழி குடும்பத்தில் பிறந்த மதுபாலா, சிறுவயதிலிருந்தே இசுலாமிய மதத்தை கடைப்பிடித்தார். [16] 1940 களின் பிற்பகுதியில் தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றிய பிறகு, மும்பையில் உள்ள பெடார் சாலையில் ஒரு வளமனையினை வாடகைக்கு எடுத்து அதற்கு "அரேபிய வில்லா" என்று பெயரிட்டார். இறக்கும் வரை அதுவே நிரந்தர வசிப்பிடமாக மாறியது. [5] 12 வயதில் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டார் . ப்யூக், செவ்ரோலெட், ஸ்டேஷன் வேகன், ஹில்மேன், மற்றும் டவுன் இன் கன்ட்ரி (அப்போது இந்தியாவில் இரண்டு பேருக்கு மட்டுமே சொந்தமானது, மகாராஜா குவாலியர் மற்றும் மதுபாலா) ஆகிய ஐந்து மகிழுந்துவின் உரிமையாளராக இருந்தார்:.[17] மூன்று இந்துசுத்தானி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டு முன்னாள் நடிகை சுசீலா ராணி படேலிடம் ஆங்கிலம் கற்கத் தொடங்கினார், மேலும் மூன்றே மாதங்களில் அந்த மொழியில் சரளமாகப் பேசினார். [12] அரேபியன் வில்லாவில் அவர் பதினெட்டு ஜெர்மானிய மேய்ப்பன் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார். [18][19]
1950 ஆம் ஆண்டின் மத்தியில், மதுபாலா மருத்துவப் பரிசோதனையின் போது அவரது இதயத்தில் குணப்படுத்த முடியாத வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.[20]
படைப்புகள் மற்றும் பாராட்டுக்கள்
மதுபாலா 1942 முதல் 1964 வரை 72 படங்களில் நடித்தார், இதில் பசந்த் (1942), நீல் கமல் (1947), மஹால் (1949), பாதல் (1951), தாரணா (1951), அமர் (1954), மிஸ்டர் & மிஸஸ் '55 ( 1955), காலா பானி (1958), ஹவுரா பாலம் (1958), சல்தி கா நாம் காடி (1958), முகல்-இ-ஆசம் (1960), பர்சாத் கி ராத் (1960), ஹாஃப் டிக்கெட் (1962) மற்றும் ஷராபி (1964). அவரது எழுபத்து மூன்றாவது மற்றும் கடைசி படம் மரணத்திற்குப் பின் வெளியான ஜ்வாலா (1971). நாடா (1955), மெஹ்லோன்கே குவாப் (1960) மற்றும் பதான் (1962) ஆகிய படங்களில் தயாரிப்பாளராக பரவலாக அறியப்பட்டார் [21]முகல்-இ-ஆஜாமில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு மதுபாலா பரிந்துரைக்கப்பட்டார். [22]