மணிப்பூர் திரைப்படத்துறை என்பது இந்திய நாட்டில் மணிப்பூர் என்ற மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு மணிப்புரியம் மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். 1972 ஆம் ஆண்டு 'மாதமகி மணிப்பூர்' என்ற முதல் மணிப்புரியம் மொழித் திரைப்படம் வெளியானது.[1] அதை தொடர்ந்து 'பயோகித்தும் ஆமா' என்ற முதல் வண்ணத் திரைப்படம் 1983 ஆம் ஆண்டு வெளியானது.[2]
2002 ஆம் ஆண்டு 'லாம்மே' என்ற திரைப்படம் வணிக ரீதியாக திரையரங்குகளில்[3] திரையிடலை கொண்ட முதல் படம் ஆகும். அதன் வெற்றியை தொடர்ந்து திரைப்படங்களின் தயாரிப்பு வேகம் அதிகரித்து மணிப்பூர் திரைபபடத்துறை விரிவடைந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40-50 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
↑"Manipuri Cinema". kanglafilms.com. Archived from the original on December 22, 2015. பார்க்கப்பட்ட நாள் January 1, 2016.