போம்பே

பிளெட்சிலி பார்க் போம்பேயின் போர்க்காலப் புகைப்படம்

போம்பே (Bombe) என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நாட்சி செருமனியின் எனிக்மா எனும் விசைமுறைக் கருவிகளின் இரகசியச் செய்திகளைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக பிரித்தானியக் குறியாக்கவியலாளர்களினால் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்னியந்திரக் கருவி ஆகும்.[1] அமெரிக்கக் கடற்படை[2], அமெரிக்கத் தரைப்படை[3] ஆகியன பின்னர் தங்கள் சொந்தக் கருவிகளை பிரித்தானிய செயல்பாட்டு விபரக்குறிப்புக்கு ஏற்ப தயாரித்தன, இருப்பினும் அவற்றின் வடிவமைப்புகள் போலந்து, பிரித்தானிய பொம்பேக்களுடன் வேறுபட்டிருந்தன.

போலந்தில் மரியான் ரெசெவ்சுக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட "போம்பா" எனப் பெயரிடப்பட்ட இவ்வகையான கருவி செருமனிய இரகசியக் குறியீடுகளைக் கண்டறிய முன்னர் ஏழாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இக்கருவியின் அடிப்படையிலேயே பிரித்தானிய "போம்பே" கருவி 1939 ஆம் ஆண்டில் அலன் டூரிங் என்பவரால் பிளெட்சிலி பார்க் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டது.[4] 1940-இல் கோர்டன் வெல்ச்மன் என்பவர் இதற்கான புதிய வடிவத்தை உருவாக்கினார்.[5] இதற்கான பொறியியல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை அரோல்ட் கீன் என்பவர் தயாரித்தார். முதலாவது போம்பே "விக்டரி" என்ற குறியீட்டுப் பெயருடன் 1940 மார்ச்சில் நிறுவப்பட்டது.[6] இதன் இரண்டாவது பதிப்பு (ஆக்னெசு) 1940 ஆகத்தில் வெளியிடப்பட்டது.[7]

பல்வேறு செருமனிய இராணுவத் தொலைத்தொடர்புப் பிணையங்களில் உள்ள எனிக்மா கருவிகளின் நாளாந்த அமைப்புகளைக் கண்டறிய போம்பே வடிவமைக்கப்பட்டது. [8][9][10]

மேற்கோள்கள்

  1. Welchman 2005, ப. 138–145.
  2. Wilcox 2001, ப. 33.
  3. Wenger 1945.
  4. Smith 2007, ப. 60.
  5. Welchman 2005, ப. 77.
  6. John Fitzgerald, Peter Gorm Larsen, Paul Mukherjee, Nico Plat, Marcel Verhoef (6 December 2005). Validated Designs for Object-oriented Systems. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781846281075.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. Simon Singh (26 January 2011). The Code Book: The Science of Secrecy from Ancient Egypt to Quantum Cryptography. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780307787842.
  8. Budiansky 2000, ப. 195.
  9. Sebag-Montefiore 2004, ப. 375.
  10. Carter, ப. 1.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
போம்பே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!