பிராட்லி ஜேம்ஸ் ஹாடின் (Bradley James Haddin பிறப்பு: அக்டோபர் 23, 1977) இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் துணை தலைவர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் நியூ சவுத் வேல்ஸ் புளூசு அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.மேலும் இவர் முதல்தரத் துடுப்பாட்டம் மற்றும் அ பட்டியல் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்பட்டார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலக்ககோப்பையில் கோப்பை வென்ற ஆத்திரேலிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மே 17, 2015 இல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தின் தூதுவராக ஸ்டீவன் சிமித்துடன் இணைந்து அறியப்படுகிறார். செப்டம்பர் 9, 2015 இல் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்தார்.[1][2] பின் பிக்பாஷ் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.
சர்வதேச போட்டிகள்
செப்டம்பர் , 2013 ஆம் ஆண்டில் சைமன் கடிச் காயம் காரணமாக விலகிய[3] தால் ஹேடின் நியூ சவுத் வேல்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஆத்திரேலிய அ அணியின் தலைவராகவும் செயல்பட்டார். அடம் கில்கிறிஸ்ற் காயம் காரணமாக விளையாட இயலாதபோது இவர் ஆத்திரேலிய தேசிய அணியின் குச்சக் காப்பாளராக செயல்பட்டார். சனவரி 30, 2001 இல் ஹோபார்ட்டில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இதில் ஒரு வீரரை ஸ்டம்பிம்ங் முறையில் வீழ்த்தினார்.மேலும் 13 ஓட்டங்கள் எடுத்தார். பின் 2001 ஆம் ஆண்டில் மேத்தியூ வேடின் வருகைக்குப் பிறகு அணியில் இவருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. பின் 2004 ஆம் ஆண்டில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. 2005 ஆம் ஆண்டிலிங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் தொடர் முழுவதும் விளையாடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படவில்லை.[4]
செப்டம்பர் 18, 2006 இல் கோலாலம்பூரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டிஎல் எஃப் கோப்பையில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதன் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரும் மைக் ஹசியும் சேர்ந்து 6 ஆவது இணைக்கு 165 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன்மூலம் 6 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனை படைத்தது.[5] 2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அடம் கில்கிறிஸ்ற் ஓய்வு பெற்ற பின்பு மே 22, கிங்க்ஸ்டன், ஜமைக்காவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 400 ஆவது வீரராக அறிமுகமானார்.[6]
டிசம்பர் 15, 2014 இல் ஸ்டீவ் சுமித்திற்குப்பதிலாக உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[7]
2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இவர் விளையாடினார். அணி நிர்வாகம் இவரை உதவித் தலைவராகவும். குச்சக் காப்பாளராகவும் தேர்வு செய்தனர்.[8] இந்தத் தொடரில் இவர் குச்சக் காப்பாளராக 29 இலக்குகளை ஆட்டமிழக்கச் எய்தார்.இதன்மூலம் ஒரு தொடரில் அதிக இலக்குகளை ஆட்டமிழக்கச் செய்த குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்தார்.[9]