பிரடோரியன் காவலர்கள் (இலத்தீன்: Praetoriani) எனப்படுவோர் உரோமப் பேரரசரின் மெய்ப்பாதுகாவலர்களாகச் செயற்பட்ட படைவீரர்கள். உரோமக் குடியரசுக் காலத்திலேயே இந்த பெயர் பட்டி பயன்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் முதலாம் கொன்ஸ்டன்டைன் பேரரசனால் இந்த காவலர்கள் முறைமை இல்லாது செய்யப்பட்டது.[1][2][3]
வரலாறு
பிரடோரயன் எனும் பெயர் உரோம போர் கட்டளை அதிகாரியின் தற்காலிக கொட்டகையைக் குறிக்கும் சொல்லான பிரடோரியம் என்பதில் இருந்து திரிபடைந்துள்ளது. இவர்கள் மிகச் சிறப்பான உரோமப் படையணியாகக் கருதப்படுகின்றனர். இந்தப் படையணிக்கு உரோமா புரியைச் சேர்ந்தவர்களும் சாராதவர்களும் சேர்க்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்