இதன் பெயர் செமித்திய மொழியில்தட்மூர் (அரபு மொழி: تدمر) ஆகும். அரமேயத்தில்,[1] இதன் பொருள் "வெல்ல முடியாத நகரம்" என்பதாகும்.[2] இப்பெயருடனான பபிலோனிய கற்றூண்கள் சிரியாவின் மாரி பகுதியில் கிடைத்துள்ளன. இன்றும் அராபிய மொழியில் இது தட்மூர் என்றே அழைக்கப்படுகின்றது.[3][4]
பல்மைரா நினைவுச்சின்ன அழிப்புகள்
சிரியாவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நினைவுச் சின்னங்களை, இசுலாமிய கொள்கைகளுக்கு எதிரான உருவ வழிபாட்டு தலங்கள் எனக்கருதி இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு அமைப்பினர், வெடிகுண்டுகளால் தாக்கி அழித்து வருகின்றனர். அவைகளில் பல்மைராவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதிலமடைந்த கோயிலும் ஒன்றாகும்.[5][6][7][8] இது ஒரு யுனெஸ்கோவின் பாரம்பரிய சினமாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.[9]