பதின்மூன்று குடியேற்றங்கள் (Thirteen Colonies) எனப்படுபவை வட அமெரிக்காவின் அத்திலாதிக்குக் கரையோரம் நிறுவப்பட்டிருந்த பிரித்தானியக் குடியேற்றங்கள் ஆகும். முதல் குடியேற்றம் 1607வில் வர்ஜீனியாவிலும் கடைசி குடியேற்றம் 1733இல் ஜோர்ஜியாவிலும் நிறுவப்பட்டது. 1754ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அல்பனி காங்கிரசில் இந்த மாநிலங்கள் ஒருங்கிணைந்து கூடிய உரிமைகளைக் கோரின; மேலும் 1776இல் தனியான கண்டத்து நாடாளுமன்றத்தை உருவாக்கி பெரிய பிரித்தானியாவிலிருந்து விடுதலை கோரின. புதிய இறைமையுள்ள நாடாக, அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள் எனப் பெயர் சூட்டிக்கொண்டன.
குடியேற்றங்கள்
பதின்மூன்று குடியேற்றங்களாவன:
- டெலவேர் குடியேற்றம்
- பென்சில்வேனியா மாகாணம்
- நியூ செர்சி மாகாணம்
- ஜோர்ஜியா மாகாணம்
- கனெக்டிகட்டு குடியேற்றம்
- மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம்
- மேரிலாந்து மாகாணம்
- தெற்கு கரோலினா மாகாணம்
- வடக்குக் கரோலினா மாகாணம்
- நியூ ஹாம்ப்சையர் மாகாணம்
- வர்ஜீனியா குடியேற்றம்
- நியூ யார்க் மாகாணம்
- ரோடு தீவு குடியேற்றமும் பிராவிடன்சு பிளான்டேசன்சும்
ஒவ்வொரு குடியேற்றமும் தனக்கானத் தனி அரசமைப்பைக் கொண்டிருந்தன. இவர்கள் பெரும்பாலும் தங்கள் நிலத்திற்குரிமையுள்ள விவசாயிகளாக இருந்தனர். நகராட்சி மற்றும் மாகாண அரசினை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பெற்றவர்களாக இருந்தனர்.உள்ளூர் நீதிமன்றங்களில் சான்றாயர்களாகப் பொறுப்பேற்றனர். சில குடியேற்றங்களில், குறிப்பாக வர்ஜீனியா, கரோலினாக்கள், ஜோர்ஜியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ஆபிரிக்க அடிமைகள் இருந்தனர். 1760களிலும் 1770களிலும் நடந்த வரிகளுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தொடர்ந்து இந்த மாகாணங்கள் அரசியலில் ஐக்கியப்பட்டு பிரித்தானிய அரசுக்கெதிராக ஒருங்கிணைந்து 1775-1783இல் புரட்சிப் போரில் ஈடுபட்டனர். 1776இல் தங்கள் விடுதலையை அறிவித்ததுடன் 1783இல் பாரிசு உடன்பாட்டில் கையெழுத்திட்டு அதனை உறுதிபடுத்தினர்.
வளர்ச்சி
-
வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்கள்
circa 1750. 1:
நியூபவுண்டுலாந்து; 2:
நோவா ஸ்கோசியா; 3: பதின்மூன்று குடியேற்றங்கள்; 4:
பெர்முடா; 5:
பகாமாசு; 6:
பிரித்தானிய ஓண்டூராசு (c1750 வரை எசுப்பானியக் குடியேற்றம்: 1798 முதல் பிரித்தானியா); 7:
யமேக்கா; 8:
பிரித்தானிய லீவர்டு தீவுகள் மற்றும்
பார்படோசு
-
1763க்கும் 1776க்கும் இடைப்பட்ட காலம்மு வட அமெரிக்கக் குடியேற்றங்கள்
-
1775இல் பிரித்தானியா சிவப்பு மற்றும் இளசிவப்பு வண்ண நிலப்பகுதிகளுக்கு உரிமை கோரியது;
எசுப்பானியா ஆரஞ்சு வண்ணப் பகுதிகளுக்கு உரிமை கோரியது. சிவப்புப் பகுதி குடியேறியப் பகுதிகளாகும்.பெரும்பாலோர் கடலோரத்திலிருந்து 50 மைல்களுக்கு உள்ளேயே வாழ்ந்தனர்.
-
மாநில நிலப்பரப்பு உரிமைக்கோரல்களும் பின்னாளில் ஐக்கிய அமெரிக்க அரசுக்கு விட்டுக் கொடுத்தப் பகுதிகளும், 1782–1802