நீதிபுரம்

நீதிபுரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636303

நீதிபுரம் (Neethipuram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் லக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவிலும், கொளத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 362 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

நீதிபுரம் ஏரி

இங்கு ஊள்ள ஏரி காட்டுப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரிப் பகுதியில் சேலம் மாவட்டத்தில் காண்பதற்கு அரிய பறவைகளான இந்திய கல்கௌதாரி, சாம்பல் இருவாச்சி, இராப்பாடி, வெண்புள்ளி விசிறிவாலி, மஞ்சள் கால் பச்சைப்புறா, அமுர் வல்லூறு உள்ளிட்ட மொத்தம் 134 பறவைகள் பதிவு செய்யபட்டுள்ளது. பறவைகள் மட்டுமல்லாது யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் போன்ற காட்டுயிர்கள் இங்கு காணப்படுகின்றன.[2]


மேற்கோள்

  1. "Neethipuram Village , Kolathur Block , Salem District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
  2. "இயற்கைப் புகலிடங்களின் வரிசையில் சேருமா சேலம்?". Hindu Tamil Thisai. 2023-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!