நிக்கல்(II) ஐதராக்சைடு (Nickel(II) hydroxide) என்பது Ni(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எலுமிச்சை-பச்சை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. அம்மோனியா மற்றும் அமீன்களில் சிதைவுடன் கரைகிறது. அமிலங்களால் தாக்கப்படுகிறது. மின் உணரியான இச்சேர்மம் , இதனால் Ni(III) ஆக்சி-ஐதராக்சைடாக மாற்றப்படுகிறது. இப்பண்பு மறுமின்னூட்ட மின்கலன்களில் பரவலான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.[5]
பண்புகள்
நிக்கல்(II) ஐதராக்சைடு சேர்மம் α மற்றும் β ஆகிய இரண்டு நன்கு வகைப்படுத்தப்பட்ட பல்லுருவங்களைக் கொண்டுள்ளது. α அமைப்பு Ni(OH)2 அடுக்குகளை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட அயனிகள் அல்லது தண்ணீருடன் கொண்டுள்ளது.[6][7] β வடிவம் Ni2+ மற்றும் OH− அயனிகளின் ஓர் அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[6][7] நீரின் முன்னிலையில், α வடிவ நிக்கல்(II) ஐதராக்சைடு பொதுவாக β வடிவத்திற்கு மறுபடிகமாகிறது.[6][8] α மற்றும் β வடிவங்களுக்குக் கூடுதலாக, பல γ நிக்கல் ஐதராக்சைடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் பெரிய இடை-தாள் தூரங்களைக் கொண்ட படிக அமைப்புகளால் வேறுபடுகின்றன.[6]
Ni(OH)2சேர்மத்தின் கனிம வடிவம், தியோபிராசைட்டு 1980 ஆம் ஆண்டில் வடக்கு கிரேக்கத்தின் வெர்மியன் பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஐடோகிரேசு அல்லது குளோரைட்டு படிகங்களின் எல்லைகளுக்கு அருகில் மெல்லிய தாள்களாக உருவாகி ஒளி ஊடுருவக்கூடிய மரகத-பச்சை படிகமாக இயற்கையாகவே இது காணப்படுகிறது.[9] இக்கனிமத்தின் நிக்கல்-மக்னீசியம் மாறுபாடான (Ni,Mg)(OH)2 கனிமத்தை இசுக்காட்லாந்தில் உள்ள ஒரு தீவில் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டது.[10]
வினைகள்
நிக்கல்(II) ஐதராக்சைடு மின்சார கார் மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Ni(OH)2 பெரும்பாலும் ஓர் உலோக ஐதரைடுடனும் ஒரு குறைப்பு வினையுடனும் இணைந்து, நிக்கல் ஆக்சி ஐதராக்சைடாக (NiOOH) ஆக ஆக்சிசனேற்றம் அடைகிறது.[11][12]
வினை 1
Ni(OH)2 + OH(–) → NiO(OH) + H2O + e(−)
வினை 2
M + H2O + e(−) → MH + OH(−)
ஒட்டு மொத்த வினை (H2O) இல்
Ni(OH)2 + M → NiOOH + MH
இரண்டு நிக்கல்(II) ஐதராக்சைடு பல்லுருவ வடிவங்களில் α-Ni(OH)2 அதிக கோட்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளது, எனவே பொதுவாக மின்வேதியியல் பயன்பாடுகளில் விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது காரக் கரைசல்களில் β-Ni(OH)2 வடிவத்திற்கு மாறுகிறது. இது தொழில்துறை பயன்பாடுகளுக்கு நிலைப்படுத்தப்பட்ட α-Ni(OH)2 மின்முனைகளின் சாத்தியக்கூறுகள் பற்றிய பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கிறது.[8]
Ni2+ அயனியை உள்ளிழுக்க நேர்ந்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இச்சேர்மத்தின் நச்சுத்தன்மை மற்றும் தொடர்புடைய பாதுகாப்புக் கவலைகள், கால்சியம் அல்லது கோபால்ட்டு ஐதராக்சைடுகள் போன்ற ஐதராக்சைடுகளை உடன் சேர்த்து Ni(OH)2 மின்முனைகளின் ஆற்றல் அடர்த்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சியை உந்தியுள்ளது.[5]
↑ 6.06.16.26.3Oliva, P.; Leonardi, J.; Laurent, J.F. (1982). "Review of the structure and the electrochemistry of nickel hydroxides and oxy-hydroxides". Journal of Power Sources8 (2): 229–255. doi:10.1016/0378-7753(82)80057-8. Bibcode: 1982JPS.....8..229O.
↑ 7.07.1Jeevanandam, P.; Koltypin, Y.; Gedanken, A. (2001). "Synthesis of Nanosized α-Nickel Hydroxide by a Sonochemical Method". Nano Letters1 (5): 263–266. doi:10.1021/nl010003p. Bibcode: 2001NanoL...1..263J.
↑Glemser, O. (1963) "Nickel(II) Hydroxide" in ""Handbook of Preparative Inorganic Chemistry, 2nd ed. G. Brauer (ed.), Academic Press, NY. Vol. 1. p. 1549.