வெவ்வேறு கலாச்சாரங்களில் உள்ள தெய்வங்களின் பிரதிநிதித்துவங்களின் உதாரணங்கள். மேல் இடது படத்தில் இருந்து கடிகாரச் சுற்றில்: இந்து, பௌத்தம், யோருபா சமயம், பண்டைய உரோம சமயம், இன்கா பேரரசின் சமயம், மாயா.
தெய்வம்[1] என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டு தெய்வீகமாக அல்லது புனிதமானதாகக் கருதப்படுவதாகும்.[2] ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி தெய்வம் என்பது "ஓர் இறைவன் அல்லது இறைவி (ஒரு பலதெய்வ நம்பிக்கை கொண்ட மதத்தில்)" அல்லது தெய்வீகமாக மதிக்கப்படும் எதையும் குறிப்பது என்கிறது.[3] சி. ஸ்காட் லிட்டில்டன் என்பவர் தெய்வம் என்பது "சாதாரண மனிதர்களை விட அதிக சக்தியுடன் இருப்பது, ஆனால் மனிதர்களுடன், சாதாரண வாழ்க்கையின் அடிப்படையான மனோபாவங்களைத் தாண்டி மனிதர்களை புதிய உணர்வு நிலைகளுக்குக் கொண்டு செல்லும் வழிகளில் சாதகமாக அல்லது எதிர்மறையாகத் தொடர்பு கொள்வது" என்கிறார்.[4] ஆண் தெய்வம் இறைவன் என்றும், பெண் தெய்வம் இறைவி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
வணங்கும் தெய்வங்கள் எத்தனை என்பதன் அடிப்படையில் மதங்களை வகைப்படுத்தலாம். ஒரு கடவுட் கொள்கைசமயங்கள் ஒரே ஒரு தெய்வத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன (பொதுவாக கடவுள் எனக் குறிப்பிடப்படுகிறார்),[5][6]பல கடவுட் கொள்கை
சமயங்கள் பல தெய்வங்களை ஏற்றுக்கொள்கின்றன.[7] கெனோதெயிச (பல கடவுள்களில் ஒரு கடவுளை வணங்கும் கோட்பாடு) சமயங்கள் ஓர் உயர் தெய்வத்தை ஏற்றுக்கொள்கின்றன. அதேநேரத்தில் மற்ற தெய்வங்களை மறுப்பதில்லை. மற்ற தெய்வங்களையும் அதே தெய்வீக கொள்கைக்குச் சமமான அம்சங்களாக கருதுகின்றன.[8][9]
தெய்வம் நமக்குள், நம்மோடு இருப்பது. கடவுள் நம்மைக் கடந்து உள்ளது.
கடவுள் என்னும் சொல் திருக்குறளில் இல்லை. தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்று வருகிறது.
தெய்வம் என்பது ஊழ். [10]இது நம் உடலோடும் உயிரோடும் ஊழ்த்துக் (பூத்துக்) [11] கிடப்பது.
தெய்வம் என்பது ஊழ். தன் குடிப்பெருமை மேலோங்கப் பாடுபடும் ஒருவனுக்கு உதவ ஊழ்த்தெய்வம் வரிந்துகட்டிக்கொண்டு வந்து துணைநிற்கும்.[12]
வான் உறையும் தெய்வம்: தெய்வத்தில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று 'வான் உறையும் தெய்வம்'. இதனை யாரும் கண்டதில்லை. வையத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவர் இந்த வான்தெய்வத்துக்கு ஒப்பாக வைத்துத் தொழப்படுவர்.[13]
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாமல் பிறர் குறிப்பறிந்து நடந்துகொள்பவனைத் தெய்வத்துக்கு ஒப்பாக எண்ணவேண்டும்.[14]
தெய்வம் எனப் போற்றப்படுபவர் துறவிகள். இல்லறத்தான் பேணவேண்டிய புலத்துறைக் களங்கள் ஐந்து. அவை தென்புலத்தார் எனப்படும் வயது முதிர்ந்தோர், தெய்வம் எனப்படும் துறவிகள், விருந்தினர், ஒருவனைச் சார்ந்து வாழும் ஒக்கல், தான் - என்னும் களங்கள். [15]
கணவன், தெய்வத்தைப் பேணவேண்டும். மனைவி தொழமாட்டாள். காரணம், கணவனே அவளுக்குத் தெய்வம்.[16]
அடிக்குறிப்பு
↑The American Heritage Book of English Usage: A Practical and Authoritative Guide to Contemporary English. Boston: Houghton Mifflin. 1996. p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0395767857.
↑Becking, Bob; Dijkstra, Meindert; Korpel, Marjo; Vriezen, Karel (2001). Only One God?: Monotheism in Ancient Israel and the Veneration of the Goddess Asherah (in ஆங்கிலம்). London: New York. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780567232120. பார்க்கப்பட்ட நாள் June 28, 2017. The Christian tradition is, in imitation of Judaism, a monotheistic religion. This implies that believers accept the existence of only one God. Other deities either do not exist, are seen as the product of human imagination or are dismissed as remanents of a persistent paganism