திருப்பல்லாண்டு (சைவம்)

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

திருப்பல்லாண்டு சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையுள் வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருவிசைப்பா. 13 பாடல்கள் கொண்ட திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் ஆவார். அப்பாடல்கள் யாவும் ”பல்லாண்டு கூறுதுமே” என்பதை ஈற்றடியில் கொண்டு பாடப்பட்டுள்ளன. [1]

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு பெரியாழ்வாரால் இயற்றப்பட்டது.

பாடல் (எடுத்துக்காட்டு)

மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

மேற்கோள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!