திருக்கண்ணபுரம் விஜயராகவன் |
---|
பிறப்பு | (1902-11-30)30 நவம்பர் 1902 |
---|
இறப்பு | 20 ஏப்ரல் 1955(1955-04-20) (அகவை 52) |
---|
பணி | கணிதவியலாளர் |
---|
திருக்கண்ணபுரம் விஜயராகவன் (Tirukkannapuram Vijayaraghavan; 30 நவம்பர் 1902 – 20 ஏப்ரல் 1955) சென்னையைச் சேர்ந்த ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். 1920களின் மத்தியில் இவர் ஆக்சுபோர்டு சென்றபோது ஜி. எச். ஹார்டியுடன் பிசோட்டு-விசயராகவன் எண்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். 1934 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் சங்கத்தின் ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விசயராகவன் சமயப்பேருரைகள் நிகழ்த்தி வந்த திருக்கண்ணபுரம் பட்டப்ப சுவாமியின் மகனாவார். வடமொழியிலும் தமிழ்மொழியிலும் நல்லப் புலமை பெற்றிருந்தார். அலிகர் முசுலிம் பல்கலைக்கழகத்தில் ஆந்த்ரே வெய்லுடன் பணியாற்றி உள்ளார். வெய்ல் அலிகர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய விசயராகவன் பின்னர் தாக்கா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[1]
விசயராகவன் கீழ்காணும் உட்பொதிவு படிமூலங்களுக்கான ஹெர்ஷ்பெல்டின் தேற்றத்தின் சிறப்பு வகையை நிரூபித்தார்:[2]
- என இருந்தால், இருந்தால் மட்டுமே,
- ஒருங்கும்.
மேற்கோள்கள்