இசைத் தமிழ் வரலாற்றைப் பற்றி மு. அருணாசலம் எழுதியிருந்ததை இரண்டு தொகுதிகளாக,
- தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி-1, பக்கங்கள் 748)
- தமிழ் இசை இலக்கண வரலாறு (தொகுதி-2, பக்கங்கள் 644)
என்று பிரித்து, முனைவர் உல. பாலசுப்பிரமணியன் பதிப்பாசிரியாராக இருந்து இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். இவ்வரிசையில் இது முதலாவது நூல்.
இந்த தமிழ் இசை இலக்கிய வரலாற்றில் 17 அத்தியாயங்களும் 8 அட்டவணைகளும் உள்ளன. சங்க காலம் தொட்டு 20 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் இருந்து வந்துள்ள இசைச் செய்திகளை ஆய்ந்து அவற்றில் இருந்து தமிழ் இசை இலக்கிய வரலாற்றை விரிவாகத் தொகுத்துக் கூறியுள்ளார். இன்று கருநாடக இசை என்றும் தமிழ் இசை என்று அறியப்படுவனவற்றின் அடி வேர்களையும் தொடர்புகளையும் ஒழுங்கு முறைகளையும் ஒப்பிட்டும் இணைத்தும் காட்டியுள்ளார்.