தத்துவராயர் (Tattuvarayar) என்பவர் கிபி 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்ட முதல் ஆசிரியர்.[1] இவர் தன் ஆசிரியர் சொரூபானந்தர் உதவியுடன் 18 நூல்களைத் தமிழில் பாடினார். அவற்றை 'அடங்கன்முறை' (அடங்கல் முறை) என குறிப்பிடுகின்றனர்.
அடங்கல்முறை நூல்களை,
- கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழில் வல்லவன் பாடுகிறான்) என்றும்,
- உலகியல் வாழ்க்கைக்கு உதவாதவை என்றும்
இவரது ஆசிரியர் சொரூபானந்தர் கருதினார்.
நூல்கள்
தத்துவராயர் நூல்கள் என இங்கு 26 நூல்கள் காட்டப்பட்டுள்ளன.
இவற்றில்
- அடங்கல்முறை என்று குறிப்பிடப்படும் தொகுப்பு நூல்கள் எண் 3 முதல் 20 வரை எண்ணிடப்பட்டுள்ள 18 நூல்கள்
- ஆசிரியருக்கு அடங்கி நடந்த முறைமையைக் கூறுவதால் பெற்ற பெயர்.
- எண் 22-ல் குறிப்பிடப்பட்டுள்ள நூல் தத்துவராயர் பயன்படுத்திக்கொண்ட நூல்.
பட்டியல்
இவர் வேதாந்தி. தம் வேதாந்தக் கொள்கைகளை நிறுவுவதற்காகத் தேவாரப்பாடல்களைத் தன் கோணத்திற்கேற்பத் திரட்டி வெளியிட்டார். அவரது தேவாரத் திரட்டு இரண்டு நூல்களாக உள்ளன.
என்பன அவை.
இவற்றையும் காண்க
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ பிரமம் என்பது வேதத்தின் மூலப் பொருள். இந்த வேதக் கொள்கைகளைப் பாட வந்த தத்துவராயர் தன்னை அறியாமல் தன் சூழல் தாக்கத்தால் சைவ, வைணவச் செய்திகளை அரவணைத்துக் கொள்கிறார்.