தகலாகு மொழி (Tagalog) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது பிலிப்பீன்சு மக்களில் 22 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 49 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர். இம்மொழியின் செந்தர வகை (standardized form) பிலிப்பீனோ என்ற பெயரில் பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆட்சி மொழியாக விளங்குகிறது. பிலிப்பீன்ஸ் நாட்டில் டகாலொக் தாய்மொழியில்லாத மக்களாலும் பொதுவாகப் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000