சேனா சம்மத விக்கிரமபாகு (Sena Sammatha Wickramabahu, சிங்களம்: සේනාසම්මත වික්රමබාහු) என்பவர் 1473ஆம் ஆண்டிலிருந்து 1511ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர் ஆவார்.[1] 1469ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியத்துக்கு எதிராகக் கிளர்ச்சி மேற்கொண்டு கண்டி இராச்சியத்தை உருவாக்கியவரும் கண்டி இராச்சியத்தின் முதல் மன்னர்ருமாவார்.[2] இவருக்குப் பின் இவருடைய வாரிசான ஜயவீர ஆட்சிக்கு வந்தார்.
ஆட்சிப் பிரதேசங்கள்
இவருடைய ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழ் கம்பளை, சிதுறுவான, தெநுவர, பலவிட்ட, மாத்தளை, பன்சிய பத்துவ, ஊவா முதலிய பிரதேசங்கள் இருந்து வந்தன.[3]