சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு வடக்கில் நாமக்கல் 8 கிமீ தொலைவிலும்; தெற்கில் இராசிபுரம் 22 கிமீ தொலைவிலும் உள்ளது. சேந்தமங்கலம் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ளது.அருகிலுள்ள முக்கிய ஆறு காவேரி ஆகும். இது சென்னை யிலிருந்து 350 கி.மீ. தொலைவிலும், பெங்களூரு விலிருந்து 255 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், திருச்சிராப்பள்ளி யிலிருந்து 93 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.